Sunday, December 18, 2011

விபச்சாரம் செய்தவர்களுக்குரிய தண்டனை.

விபச்சாரம் என்பது தனி மனித ஒழுங்கீனம் மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கின்ற மிகப் பெரிய சமூகத் தீமையாகும். விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும். எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம். எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை ...விதித்துள்ளது. 

விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். 

அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். 
அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்.

No comments:

Post a Comment