Sunday, December 18, 2011

ராணா படம் தள்ளிப்போனதற்கான நிஜ ரகசியம்!

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே `முத்து,` `படையப்பா' ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்தார்கள். அதையடுத்து இருவரும் `ராணா' படத்தில் இணைவதாக இருந்தார்கள்.
`ராணா' படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக, `கோச்சடையான்' என்ற புதிய படத்தை உருவாக்க ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது, ஒரு மாவீரனை பற்றிய கதை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்.

`கோச்சடையான்' படம் பற்றியும், முதன்முதலாக ஒரு இந்தி படம் டைரக்டு செய்வது பற்றியும் `தினத்தந்தி' நிருபருக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"கோச்சடையான் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இந்த கதைக்கும், ஒரு வார பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும் `கோச்சடையான்' என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் `கோச்சடையான்' படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.

அதன்பிறகு, நான் ஒரு இந்தி படத்தை டைரக்டு செய்கிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், `ராணா' படத்தை டைரக்டு செய்வேன் என்றூ கூறினார்.

No comments:

Post a Comment