Sunday, December 18, 2011

ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

கடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது. இணைதளங்களில் அளவிற்கு


தரங்கம்பாடி: இத்தாலி நாட்டை சேர்ந்த டான் பாஸ்கோ ஆதரவற்ற சிறுவர்கள், இளைஞர்களுக்காக கல்வி நிலையங்கள், தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி சேவை செய்து வந்தார். அவரது வலது கரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த வலது கரம் மெழுகு சிலை யில் பொருத்தப்பட்டு அவரின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இப் போது இந்தியாவில் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்துள்ளது. அத்திரு கரம் வருகிற 21 மற்றும் 22ம் தேதி தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் உள்ள டான் பாஸ்கோ பால்டெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. டான் பாஸ் கோவின் அருளையும், ஆசியையும் பெற்று செல்லுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்.

டான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது. இப்படி அளவிற்கு அதிகமாக ஊடக பிரபலம் கொடுக்கப்படுவதால், நிச்சயமாக இந்தியர்கலுக்கு இதில் என்ன விஷயம் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது. அதனால் மேற்கொண்ட ஆய்வு தான் இது.
டான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்?


அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?
ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்?
ஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய மர்மம் என்ன?
யாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை?

என்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.

“ரெலிக்” மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள்: “ரெலிக்” என்று சொல்லப்படும் அது இறந்துபோன மனிதனுடைய உடலின் பகுதி ஒன்றை ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு வழிபட்டு வருவது கிருத்துவர்களின் நம்பிக்கை. அந்த மனிதன் – கடவுளாக மதிக்கப்படும் ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, சந்நியாசி, அப்போஸ்தலர், பிஷப் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நகம், முடி, மண்டை ஓடு, எலும்பு, எலும்புக் கூடு, என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அது உண்மையாகவே இருக்கலாம் அல்லது உருவாக்கப் பட்டிருக்கலாம். இடைக்காலத்தில், கிருத்துவ மதத்தைப் பரப்ப பலவிதமான மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள், மனித எச்சங்கள் தயாரிக்கப் பட்டன, விற்கப்பட்டன. சிலுவைப் போர்கள் மற்றும் பின் வந்த காலத்தில் இவற்றிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதனால் அவற்றிற்கான தேவை அதிகமாயிற்று. தேவை பல போலிகளை உருவாக்கியது. அவை பிறகு இக்காலத்தில் சி-14 போன்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று தெரியவந்தது. இப்பொழுதும் கிருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிந்து தான் உள்ளது. இருப்பினும் சர்ச் நம்பிக்கையை வளர்க்க இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறது. அதுபோலத்தான் இந்த டான் போஸ்கோ வலது கை எலும்பு.

இந்த நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாதா? ஊடக பலம், பணபலம், அனைத்துல அதிகாரம், அரசியல் பலம் முதலியற்றால், கிருத்துவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்து வருகின்றன. செக்யூலரிஸம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுருத்தும் “ஹிந்து” கிருத்துவ மதத்தைப் பரப்ப, இத்தகைய கேடிகெட்ட வேலைகளை வெட்கமில்லாமல் செய்து வருவதும் வருத்தத்திற்குரியது தான்.

டான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன? கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[10]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[11] பிடோஃபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[12], சிறைதண்டனை பெற்றனர்[13], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[14]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் போலும். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருக்கிறது.


டான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[15]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள்.

வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உருவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.


No comments:

Post a Comment