இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இதுவும் முக்கியமானது, ஜப்பான் நகரின் அதிவேக வீதியொன்றில் ஒன்றல்ல இரண்டல்ல பதின்மூன்று சொகுசு கார்கள் ஒன்றுடன் ஓன்று மோதி தொடரான விபத்தை சந்தித்துள்ளன,
அனைத்துகார்களும் மிகவும் சேதமடைந்துள்ளன, வேகத்திற்கு பெயர்போன இந்த கார்கள் பெயருக்கேற்ப அதி உச்ச வேகத்தில் ஒன்றுடன் ஓன்று போட்டி போட்டுவந்தன, 8 Ferraris, 3 Mercedes, a Lamborghini, a Skyline மற்றும் Toyota Prius உள்ளடங்கலான இந்த வரிசையில் பிழையான வரிசையில் புகுந்த Toyota Prius இனால் பின் வந்த அனைத்து கார்களும் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகின!
எனினும் Toyota Prius இற்கு பின்வந்த ferrari யின் 60 வயது ஓட்டுனர் முறையாக சிக்னல் செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம், இதன் பின்னர் இந்த வீதியின் பாவனை நிறுத்தப்பட்டு கார்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சேதம் மோசமாக இருந்தாலும் யாருக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை

|
No comments:
Post a Comment