Friday, December 23, 2011

25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பேனா… சூப்பராக எழுதியது ?

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) 25 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஸ்கெட்ச் பேனாவால் நாக்கை அழுத்தி பிடித்தபடி கண்ணாடியில் பார்த்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேனா வாய்க்குள் சென்று விட்டது. மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததிலும் எதுவும் தெரியவில்லை. பேனாவை விழுங்கி விட்டதாக அவர் கூறியதை டாக்டர்கள் நம்பவில்லை. 

இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்றுப்போக்கும் இருந்தது. சி.டி. ஸ்கேன் செய்து பார்த்தபோது குடல் பகுதியில் பேனா இருப்பது தெரிந்தது. உடனே ஆபரேஷன் மூலம் பேனா அகற்றப்பட்டது. பேனா சேதம் அடையாமல் நன்றாக இருந்தது. அதை எடுத்த டாக்டர் எழுதி பார்த்தார். இன்னொரு ஆச்சரியம்.. பேனா சூப்பராக எழுதியது.



No comments:

Post a Comment