Friday, December 16, 2011

கம்ப்யூட்டரின் விலை ரூ. 1,500


மாணவர்களுக்கு மலிவு விலையில் கம்ப்யூட்டர்ரை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது.ரூ. 1,500 விலையுள்ள கம்ப்யூட்டரை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. மாணவர்களுக்கென பிரத்யேகமாக இந்தக் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கம்ப்யூட்டரை வெளியிட்டு கபில் சிபல் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் இந்தக் கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பல்வேறு நிபுணர்கள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது இப்போது ரூ. 1,500 என இந்தக் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர், நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க முன்வரும் வேளையில் இதன் விலை ரூ. 500 ஆகக் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்தார். வழக்கமான கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப் கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
(நன்றி -தினமணி)

No comments:

Post a Comment