பேஸ்புக் புகைப்படங்களை கடும் குளிருக்குள் உறைய வைக்க தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் புதிய சேவையக மையம் (New Server Farm) சுவீடனின் லொலே(Lulea) நகரில், அமைக்கப்படவிருக்கிறது. தனது அதிவேக தொழில்நுட்ப திறனுடன் இயங்கும் சூப்பர் கணனிகளை குளிர்மையாக வைத்திருக்கவே, வடதுருவத்துக்கு அருகாமையில் இப்படி கடுங்குளிரில் உறைந்து போயிருக்கும் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் பேஸ்புக் நிறுவனத்தின் முதல் சேவையக மையமும் இது தான். ஐரோப்பாவில் எங்கு இதனை அமைக்கலாம் என சல்லடை போட்டு இடம் தேடிய பேஸ்புக் நிறுவனம் இறுதியில் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது.

பேஸ்புக்கை அமெரிக்காவில் பயன்படுத்துவோரை விட அமெரிக்காவுக்கு வெளியே பயன்படுத்துபவர்கள் அதிகரித்துவிட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பாவுக்கு இந்த சேர்வர் மையத்தை விரிவு படுத்த வேண்டியதாகிவிட்டது என்கிறார் பேஸ்புக் தள நிர்வாக இயக்குனர் டொம் ஃபுர்லோங்!
இதுவரை பேஸ்புக் தனது பயனாளர்களின் தகவல்களை (Users Datas) அமெரிக்காவின் கலிபோர்னியா, வேர்ஜினியா, ஒரீகன், வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் அமைத்திருந்தது.
அண்மையில் பிரபல கைத்தொலைபேசி நிறுவனமான BlackBerry, பயனாளர்களின் அளவுக்கு மீறிய தகவல்களை சேமிக்க முடியாது தடுமாறி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மாபெரும் நஷ்டத்தை சந்தித்தற்கு காரணம் குறைவான தகவல் களஞ்சிய மையங்களை கொண்டிருந்ததே.

இந்த நிலைமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதனால் பேஸ்புக் உஷாராகி கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
|
No comments:
Post a Comment