இந்த Daniusoft Video Studio Express மென்பொருளானது $35.00 மதிப்புடையதாகும். இந்த மென்பொருளை வரும் 2011, பிப்ரவரி 16ம் தேதி வரை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் லைசன்ஸ் கீயுடன். நாம் இதுபோன்ற மென்பொருள்களை விலைக்கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவசமாக எந்த மென்பொருளும் கிடைக்காது அப்படியே இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இருக்காது. Daniusoft Video Studio Express மிகவும் சிறப்பான மென்பொருளாகும்.
மென்பொருளை இலவசமாக பெற சுட்டி

சுட்டியை கிளிக் செய்தவுடன் பேஸ்புக் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள், பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும் அதில் கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.


இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மூலமாக வீடியோக்களை எளிமையாக எடிட் செய்ய முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad ஆகிய சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும். மென்பொருளை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
|
No comments:
Post a Comment