Sunday, May 1, 2011

மாம்பழத்தின் மகத்துவம்


பொதுவாக மாம்பழங்கள் உடலுக்குச் சூட்டினை தரும் என கூறுகின்றனர். வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, பழுக்கச் செய்யும் மாம்பழங்கள் மட்டுமே உடலுக்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றன. 

மற்றபடி மாம்பழங்கள் அதிகளவில் நன்மையைக் கொண்டுள்ளன. மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் "வைட்டமின் ஏ' உள்ளன. மாம்பழத்தின் தோலில் உள்ள நார்ச்சத்து, உணவு மண்டலம், கழிவு நீக்க மண்டலத்துக்கு ஏற்றதாகும். எனவே மாம்பழத்தை தோலுடன் சாப்பிடுவது நல்லது என கூறுகின்றனர். 

மாம்பழத்தை தோலுடன் சாப்பிடும் போது, அதில் உள்ள ரசாயனப் பொருட்களின் நச்சுத் தன்மையை நீக்க, கல் உப்பு போட்ட நீரில் மாம்பழத்தைக் கழுவ வேண்டும். மாம்பழத்தில் உள்ள நன்மைகளைக் கருத்தில் கொண்டு தான், ஆங்கிலத்தில் அதனை "சூப்பர் புரூட்' என அழைக்கின்றனர். 100 கிராம் மாம்பழத்தின் கலோரி மதிப்பு 70 ஆகும். சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் மாம்பழத்தைச் சாப்பிடக் கூடாது.

No comments:

Post a Comment