தனியாக ரயிலில் பயணம் செய்த பெண்ணை குடிபோதையில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜ்மரிலிருந்து அபு ரோடு செல்லும் அஜ்மர்-டாடர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயது பெண் ஒருவர் தனியாக பயணம் செய்துள்ளார். இவரிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் கூச்சலிட்ட அந்த பெண்ணின் குரல் கேட்டு வந்த சக பயணிகள் டிக்கெட் பரிசோதகரை சரமாறியாக தாக்கியதுடன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்ட போது, ஸ்லீபர் கோச்சில் அமர்ந்திருந்த தன்னை ஏசி கோச்சிற்கு வருமாறு டிக்கெட் பரிசோதகர் அழைத்ததாகவும் தெரிவித்தார்.
அருகில் இருந்த ஏசி கோச்களும் காலியாக இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் வந்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment