Tuesday, April 12, 2011

எம்.ஜி.ஆரை கொல்வதற்கு தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!!


எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அரசியலை  அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அரசின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி..

 எம்.ஜி.ஆரையே இந்த கருணாநிதி நீக்கிட்டாருய்யா...என மக்கள் கடும் ஆத்திரத்துடன் கலைஞர் மீது இருந்தனர்... தாய்மார்கள், பெண்கள், முதியோர்கள் அனைவரும் கலைஞர் இருக்கும் திசை நோக்கி மண்ணை வாரி சாபம் விட்டனர்...எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் பெரும்படையுடன் ஆவேசமாக கிளம்பியது..முசிறி புத்தன் தான் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவர்... மிகவும் கொதிப்புடன் இருந்தார்..நீதி கேட்டு பயணம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்புடன் வருகிறார்கள்...எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடக்கிறார்..அமைதியாக செயல்படுங்கள் என்கிறார் அண்ணாசாலையில் நடக்கிறார்கள்..அப்போதுதான் முசிறி புத்தன் புரட்சித்தலைவர் வாழ்க..என்ற கோஷம் கிளம்பியது..தமிழகம் முழுவதும் கெட்டியாக ஒட்டிக்கொண்ட்து....

ராமவரம் தோட்ட்த்தில் எம்.ஜி.ஆருடன் முசிறிபுத்தன் வாக்குவாதம் செய்கிறார். தலைவரே நீங்கள் கட்சி ஆரம்பிங்க..இந்த கருணாநிதிக்கு நாம யாருன்னு சரியான பாடம் புகட்டுவோம் என்கிறார்..எம்.ஜி.ஆர் அது எல்லாம் வேண்டாம்..சினிமாவே எனக்கு போதும்..நாம கட்சி ஆரம்பிச்சா மக்கள் ஏத்துக்குவாங்களா..என்கிறார்,,

நீங்க சரின்னு சொல்லுங்க நாங்க பார்த்துக்குறோம் என்கிறார் புத்தன்
எம்.ஜி.ஆர்..சம்மதம் தெரிவிக்க,அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகிறது....

உலகில் முதன்முதலாக ஒரு நடிகர் ஒரு கட்சி தொடங்குகிறார்..கலைஞர் இதை வளர விடக்கூடாது என கட்சிக்கு அனுமதி கிடைக்க விடாமல் பல வழிகளில் தடை போடுகிறார்...மாநில கட்சிகள் தொடங்க அனுமதி இல்லை என கலைஞரின் சூழ்ச்சியால் சென்னை தேர்தல் கமிஷனில் சொல்கிறார்கள்....தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் டில்லி சென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என இந்திய அளவில் உள்ள கட்சியாக பதிவு செய்து கலைஞருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்களை சந்திக்க கூடாது எனவும் அவரை எப்படியும் போட்டுதள்ளிவிடும்படி தன் கட்சியினருக்கு மறைமுக அசைன்மெண்ட் கொடுத்திருந்தார் கலைஞர்...அக்காலத்தில் தி.மு.க என்றாலே ரவுடிகள்தான்..மக்கள் நடுங்குவார்கள்..அந்தளவு தி.மு.கவினர் அராஜகம் செய்வார்கள்..இந்திராகாந்தியையே மதுரையில் கொல்ல முயற்சித்தார்களே...அதுபோல எம்.ஜி.ஆருக்கும் பலவகையில் தொல்லை கொடுத்தார்கள்..அவரை கொல்ல பெரும் தி.மு.க படை தயாரானது...இவரை உயிரோடு விட்டால் நாம் ஆட்சியை இழக்க வேண்டிவரும்..என மொத்த தி.மு.க வும் களத்தில் இறங்கியது..


அக்காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தி.மு.க வை விமர்சனம் செய்தால்..உடனே சுற்றிவளைத்து அடிஉதை விழும்..மேடை ஏறி வெட்டுவார்கள்.. அல்லது கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவார்கள் தி.மு.க வினர்..அப்படிப்பட்டவர்கள் தனக்கே இன்று குறிவைக்கப்பட்ட்தை அறிந்த எம்.ஜி.ஆர் அதை எப்படி சமாளித்தார் தெரியுமா..?..

No comments:

Post a Comment