Tuesday, April 12, 2011

ஜெயலலிதா வெற்றி -ரிப்போர்ட்டர் கருத்து கணிப்பு

யார் முதல்வராக வர வேண்டும் என ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் தமிழ்கம் முழுவதும் மக்களிடம் சூறாவளி சுற்றுப்பயணம் நடத்தி...கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது...



தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 11 இடைத்தேர்தல்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது..ஓட்டுக்காக ஆளுங்கட்சி சார்பில் அதிக பனம் விளையாடியதும்,அனைவரும் அறிந்ததுதான்...இதே போல வரும் பொது தேர்தலிலும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என ஆளுங்கட்சி நினைக்கிறது...ஆனால் மக்களின் மனநிலை இதற்கு இதற்கு மாறாக இருப்பது ஆச்சர்யம்....



அதே போல விலைவாசி உயர்வும் கிராமம்,நகரம் வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது...
எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை காண முடிந்தது....

அவர்கள் கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என ரிசல்ட் சொல்கிறது...கடந்த தேர்தலில் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க விரும்பாத சிறுபான்மை மக்கள் இந்த தேர்தலில் கணிசமான அளவில் அ.தி.மு.க வுக்கு ஆதரவளிக்க முன் வந்திருக்கிறார்கள்....

கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்..

அதே நேரத்தில் தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்...என்று சொல்கின்றனர்...

சர்வேயில் அ.தி.மு.க வுக்கு 58 சதவீதம் பேரும்,தி.மு.க வுக்கு 33 சதவீதம் பேரும்,ஆதரவு தெரிவித்துள்ளனர்...எனவே அ.தி.மு.க அணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தீர்க்கமாக தெரிகிறது.

நன்றி-ரிப்போர்ட்டர்

இந்தியா டுடே இதழும் தனது கருத்து கணிப்பில் ஜெயலலிதாவே வெல்வார் என கூறியுள்ளது...

இந்தியா டுடே-ஓஆர்ஜி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 164 தொகுதிகளையும், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

சதவீத அடிப்படையில் பார்த்தால், அதிமுக கூட்டணிக்கு 50 சதவீதத்தினரும், திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவுட் லுக் பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பு;

அதே போல அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும்,

திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் பேரும், மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment