Monday, March 28, 2011

தாழ் நிலை விமானங்கள்


பொதுவாக நம் பொழுதுபோக்கு நேர பயன்பாட்டிற்குள் வருவது செய்தித்தாள்களும் – தொலைக்காட்சி ஊடகங்கள்தான். அவைகள் நம் மூளையை சுவாரஸ்ய செய்திகளின் சேகரிப்பு பெட்டகமாகவும் – நுகர்வு கலாச்சார வணிக புலமாகவும்தான் பெரும்பாலும் பயன்படுத்துவது நமக்கு புரிகிறதா ? நம் சிந்திக்கும் முறையையே மாற்றம் செய்யும் வலிமை கதை சொல்லிகளுக்கு உண்டு
.
கதை சொல்லி நாடக உருவாக்கம் செய்பவர்களுக்கு வியாபார நோக்கம்தான் பிரதானம் என்பதால், பிறழ் நிலை உறவு பிம்பங்களையே கதைகளில் உலவ செய்து, நம்மை சுவாரஸ்ய கதை விரும்பிகளாக மாற்றியதுதான் அவர்கள் வணிக சாமர்த்தியம். இவைகளின் தாக்கங்கள் நம் தனி மனித உறவு தொடர்புகளில் வெளிப்படுகிறது.
சமீபத்திய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘ இளம் வழுக்கை தலை உடையவர்களை ‘ மையப்படுத்திய பேச்சு உரையாடல் ஒளிபரப்பானது.
அதில் பங்கேற்ற இளம் பெண்கள் பலர் இளம் வழுக்கையாளர்களை வாழ்க்கை துணயாக ஏற்பதில்லை என கூறுவதை கேட்டேன். வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட , இந்த வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பில் இந்த தாக்கத்தை உண்டு செய்தது தொலைக்காட்சிகள்தான் என்பது மறுப்பதற்கில்லை. நுகர்வு கலாச்சாரத்தால் ஏற்பட்ட மிதமிஞ்சிய ரசனை உணர்வுகளின் உளவியல் வெளிப்பாடுகள்தான் இந்த சிந்தனைகள்.
தலை முடிகளின் எண்ணிக்கையை வைத்து வாழ்க்கை தரத்தை எப்படி நிர்ணயிக்க முடியும் ? இது எந்த வகை புத்திசாலித்தனம் எனவும் புரியவில்லை.
நம் இணையத்தில் எண்ணங்களை காயப்படுத்தாத – ரசனையான தொடர்களை இந்த சவால்களுக்காகவே ஆரம்பித்துள்ளோம்.
நம் தலைக்கு மேலே தாழ பறந்து நம் மூளைக்குள் செய்தி வியாபாரம் செய்பவர்கள் பற்றி நமக்கு எச்சரிக்கை தேவை.

No comments:

Post a Comment