Monday, March 28, 2011

நானோ டெக்னாலஜி


நானோ டெக்னாலஜியின் நுட்ப அளவை அறிந்து கொள்ள முதலில் மைக்ரோ டெக்னாலஜியை நீங்கள் கவனிக்கவேண்டும். இன்றைய தினங்களில் எல்லா கம்ப்யூட்டர்களிலும் செல்ஃபோன்களிலும் ஏன் வாஷிங் மெஷின், டி.வி , ஃப்ரிஜ், விலை உயர்ந்த விளையாட்டு பொம்மைகள் போன்ற எல்லா சாதனங்களிலும் சிலிக்கான் மைக்ரோ கண்ட்ரோலர் சிப் இருந்தே தீரும். இந்த சிப்-கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ?

மிக மிக சுத்தப்படுத்தப்பட்ட சிலிக்கான் என்னும் தனிமத்தின் மேல் அதிநுட்பமான கோடுகள் வரைந்து – ஜன்னல்கள் பிரித்து கட்டுபடுத்தப்பட்ட  அளவு ஆர்ஸ்னிக் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களை படியவைக்கிறார்கள். இதை மாஸ் தொழில் நுட்பம் என்கிறார்கள். மெட்டல், ஆக்ஸைடு, செமி கண்டக்டர் என்று மூன்று தளங்களில் மிக சிக்கலாக வடிவமைக்கப்பட்ட சர்க்யூட் இணைக்கப்புகளைப் பதித்து உற்பத்தி செய்கிறார்கள். இந்த தொழில் நுட்பத்தில் ஒரு மைக்ரான் வரை வந்திருக்கிறார்கள். அதற்கு குறைவான சப் – மைக்ரான் அளவையும் எட்டியிருக்கிறார்கள். மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சம் பாகம், நம் தலையில் நூறு மைக்ரான் தூசு துகள், நாற்பது மைக்ரான் – கண்ணால் பார்க்ககூடிய நுட்பம், முப்பது மைக்ரான் …இதெல்லாம் மைக்ரோ டெக்னாலஜி . நாம் பார்க்கபோவது நானோநானோ என்பது மைக்ரோவில் ஆயிரம் பாகம். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் நூறு கோடி பாகம். இந்த அளவு நுட்பத்தை இன்னும் அவர்கள் எட்டவில்லை. ஒரு நானோ மீட்டர் வரை உள்ளே போகவில்லை. எனவே சுமார் நூறு நானோ மீட்டரிலிருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டே போய் ஒரு தனிப்பட்ட எலக்ட்ரானை நம் இஷ்டப்படி நடத்துவதுதான் இந்த இயலின் இறுதிக் குறிக்கோள். அந்த அளவுக்கு இன்னும் அவர்கள் வெற்றியடையவில்லை. எனினும் ஆராய்ச்சி முயற்சிகள் சில, ‘இது சாத்தியம்’ என்கிற நம்பிக்கை தருகின்றன. நாம் வெற்றி பெறாவிட்டாலும் இயற்கை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு பாக்டீரியா வின் இயக்கம்தான் சிறந்த நானோ டெக்னாலஜி இயந்திரம். இந்த இயலின் மைல் கல்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment