Friday, December 17, 2010

புகையுடன் பாக்டீரியாக்களும்

இதுவரைக்கும் சிகரெட்டுக் குடிக்கும்போது வர்ற புகையினால மட்டும்தான் பிரச்சினை வருதுன்னு  நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ, புகையினால மட்டுமே பிரச்சினை இல்லைன்னு ஒரு புது குண்டைத் தூக்கிப் போடறாங்க சில ஆய்வாளர்கள்!?
இது என்னடா வம்பாப் போச்சேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க, இந்த செய்திய தெரிஞ்சிக்காம தொடர்ந்து சிகரெட்டுக் குடிச்சிக்கிட்டு இருந்தா பெரிய வம்பாப் போயிடுமுங்க! அப்படின்னு எச்சரிக்கிறாங்க சிகரெட்டுக் குறித்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள்
புகையுடன் பாக்டீரியாக்களும்
மேட்டரு என்னன்னா, சிகரெட்டுக்குள்ள கொடிய நோய்கள உண்டாக்குற பல “பாக்டீரியாக்கள்” இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்! இதுல கொடுமை என்னன்னா, சிகரெட்டுக்குள்ள இருக்குற அந்த பாக்டீரியாக்கள்  சிகரெட்டு குடிக்கிறவங்கள மட்டுமில்லாம, அந்த சிகரெட்டிலிருந்து வர்ற புகையை சுவாசிக்கிற  எல்லாரையுமே தாக்குகிறதாம். இது எப்படி இருக்குன்னா,
இந்த ஆய்வில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவன சிகரெட்டுகள்ல மனிதர்கள தாக்குற கொடிய பாக்டீரியாக்கள் இருந்தது மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது அப்படின்னு சொல்றாரு இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் சப்கோட்டா!  அதுமட்டுமில்லாம, சிகரெட்டுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் கொடிய நோய்கள் ஏற்படுத்துவதோடு, வருடக்கணக்கில் நம்மை இம்சிக்கும் பல வகை நோய்களையும் உண்டாக்கும் இயல்புடையவைன்னு சொல்றாரு சப்கோட்டா!

இந்த ஆய்வைப் பத்தி சுருக்கமா சொல்லனும்னா,
1. கடைகளில் கிடைக்கும் சிகரெட்டில் பல்வேறு பாக்டீரியாக்கள் (மண்ணிலிருப்பவையிலிருந்து மனிதனைத் தாக்குபவை வரை!) இருக்கின்றன
2.  இதுவரையிலான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள (சிகரெட்டிலுள்ள) பாக்டீரியாக்கள் மிகக் குறைவே, மேலும் சோதனை செய்தால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்!
3. இதுவரை சோதனைக்குட்படுத்தப்பட்ட சிகரெட்டு ப்ராண்டுகள்: Camel; Kool Filter Kings; Lucky Strike Original Red; and Marlboro Red (இதெல்லாம் நம்மூர்ல (இந்தியாவுல) கெடைக்கறதில்லையோ?!)
4. மனிதர்களில் கொடிய நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்:
சிகரெட்டில் உள்ள பாக்டீரியாக்கள்
ஏற்படுத்தும் நோய்கள்
அசினோபாக்டர்(Acinetobactor)
நுரையீரல் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்
பெசில்லஸ்
(Bacillus)

உணவு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஆந்தராக்ஸ் பாக்டீரியா
பர்கோல்டீரியா (Burkholderia)
சுவாசக் குழாய் தொடர்பான தொற்று நோய்கள்
க்ளாஸ்ட்ரீடியம் (Clostridium)
உணவு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள்
க்லெப்சியெல்லா (Klebsiella)
நுரையீரல் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதர பல நோய்கள்
சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa)
மருத்துவமனையில் ஏற்படும் சுமார் 10% தொற்று நோய்களுக்கு காரணமானவை
இப்போ புரியுதுங்களா, சிகரெட்டுல இருந்து என்னென்ன பிரச்சினை வருதுன்னு?! ஆக சிகரெட்டு குடிக்கிறதுனால ஏற்படற புகையினால மட்டும் ஆபத்து இல்ல. அதிலிருந்து உடம்புக்குள்ள போற கொடிய பாக்டீரியாக்களினாலயும் தாங்க!

No comments:

Post a Comment