Monday, December 27, 2010

2010ம் ஆண்டின் சிறந்த மனிதனாக பேஸ்புக் நிறுவனர்

ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை அறிவித்துள்ளது. இவர் உலகில் வாழும் மிக இளவயது கோடீஸவரர்களில் ஒருவர். டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவிக்கப் பட்ட ஆண்டின் சிறந்த மனிதர்களில், 1927 ஆம் ஆண்டிற்குப் பின் அறிவிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதுடையவரும் இவரே. பிரிட்டன் மகாராணி எலிசபெத் இதே போல 1952 ஆம் ஆண்டில் அறிவிக்கப் படுகையில் இளவயது டையவராகவே இருந்தார். ஆனால், ஸக்கர் பெர்க் அவரைக் காட்டிலும் வயதில் இரண்டு வாரங்கள் குறைவாகவே உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் இதழ், மனித சமுதாயப் பண்பாட்டில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியவருக்கு இந்தப் பெருமையை ஆண்டு தோறும் தருகிறது.
சமுதாயத்தின் மீதான இந்த தாக்கம், நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். 2007 ஆம் ஆண்டில் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின், 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா இந்தப் பெருமையைப் பெற்றனர். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதில் மாற்றங் களைக் கொண்டு வந்தவர் என்று மார்க் ஸக்கர் பெர்க்கினைப் பாராட்டியுள்ளது டைம் இதழ். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில், தன் 19 ஆவது வயதில், பேஸ்புக் இணைய திட்டத்தினை ஸக்கர் பெர்க் தொடங்கினார். இன் றைக்கு ஏறத்தாழ 55 கோடி மக்களைக் கொண்டதாக பேஸ்புக் இயங்கி வருகிறது. ஸக்கர் பெர்க் இந்த பாராட் டினைத் தன்னுடன் பணியாற்றும் சிறிய குழுவினருக்கு சமர்ப்பித்துள்ளார். இந்த குழுவின் உழைப்புதான், உலகை விரியவைத்து, பல கோடி மக் களை இணைத்துள்ளது என்றும் கூறி உள்ளார். இதில் ஒரு பகுதியாகத் தான் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸக்கர் பெர்க்கின் தயாள குணமும் இந்த பெருமையை அடைவதற்கு வழி வகுத்திருக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூ ஜெர்ஸி பள்ளி இயக்கத்திற்கு, ஐந்து ஆண்டு காலத்தில், 10 கோடி டாலர் தருவ தாக வாக்களித்து வழங்கினார்.

No comments:

Post a Comment