Showing posts with label GOOGLE. Show all posts
Showing posts with label GOOGLE. Show all posts

Sunday, July 10, 2011

கூகிளினால் இந்தியாவுக்கு தலைவலி

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.


இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகிள் கூறியுள்ளது.பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.தகவல்களை கேட்கிறது இந்திய அரசுகூகிளுக்கு உலக அளவில் பெரும் ஆதரவு உள்ளதுகூகிள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகிள் கூறியுள்ளது.இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகிள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்ததாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகிள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, July 9, 2011

கூகுள் பிளஸ், Vs பேஸ்புக் கிரெடிட்: தொடரும் போட்டி!

சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக ‘பேஸ்புக் கிரெடிட்ஸ்’ என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, அமலுக்கு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் தொடர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
 
இந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’ என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது ‘கூகுள் பிளஸ்’ என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் ‘தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)’ சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளாகர் என்னும் பெயரை கூகிள் மாற்றப்போகிறது

கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


வலைப்பதிவர்களுக்கான புளகர் (Blogger) சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான பிகாஸா (Picasa) மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. புளகர் நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். பிகாஸா என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும்.

இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

இந்நிலையில் கூகுள் தனது இரண்டு பிரதான சேவைகளின் பெயர்களை மாற்றும் செய்தியானது அது தனது சமூகவலையமைப்பான ‘கூகுள் +’ இன் அறிவிப்புக்குப் பின்னரே வெளியாகியுள்ளது. அதன்படி புளகர் சேவையானது கூகுள் புளக்ஸ் எனவும் பிக்காஸா சேவையானது கூகுள் போட்டோஸ் எனவும் அழைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

கூகுள் இதற்கு முன்னரும் தனது சேவைகளின் பெயரை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூகிள் நிறுவனம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் சாதனை! (பட இணைப்பு)

உலகில் 63 மொழியில் உள்ள ஆக்கங்களை தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை 63 மொழிகளிலும் மொழிபெயர்பு செய்யும் வசதி உருவாகி உள்ளது.

கூகிள் நிறுவனத்தின் மொழி மாற்றம் செய்யும் பகுதியில் இதனை கூகிள் நிறுவனம் இணைத்துள்ளது.

இதன்மூலம் உலகில் தமிழ்மொழி கணினி உலகத்தில் புதிய வளர்ச்சி படி நிலையை அடைந்துள்ளது.

விசேடமாக கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வலயமைப்பு இலங்கை தமிழருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் மொழி மாற்றப்பக்கத்திற்குச் செல்லமுடியும்.http://translate.google.com/?sl=en#en|ta|


Tuesday, July 5, 2011

கூகுள் இந்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்தது

கூகுள் இணையத்தளம் கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில் இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.
 

இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில் இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது.

அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகுள் கூறியுள்ளது.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறித்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூடியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை(blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.

அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகுள் கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில் 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்த வரை தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நாடுகளில் இருந்தும் கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் ப்ளஸ்… குவியும் ஆதரவு… திணறும் சர்வர்!

பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள கூகுள் ப்ளஸ் சேவையின் சோதனை ஓட்டமே பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.இந்த சமூக தளத்தில் இணைய லட்சக்கணக்கான மெயில்கள் குவிந்துவிட்டன. இதன் விளைவு, கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு திணறிவிட்டது.


எனவே, ‘மன்னிக்கவும், அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு வாடிக்கையர் மெயில்கள் குவிந்துவிட்டன. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளஸ் செயல்படும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் சமூகத் தள பொறுப்பாளர் குண்டோத்ரா.

பல கோடி பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், தாங்கும் அளவுக்கு இந்த கூகுள் ப்ளஸை பலமான தளமாக உருவாக்கி வருகிறது கூகுள்.பேஸ்புக்கில் வருவதுபோன்ற ஸ்பேம் செய்தி தொல்லைகள் இந்த கூகுள் ப்ளஸில் இல்லாத அளவுக்கு கோடிங் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்படும் ஐபோன்களுக்காகவே மொபைல் கூகுள் ப்ளஸ் என்ற மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.முழுமையாக கூகுள் ப்ளஸ் பயன்பாட்டுக்கு வரும் தருணத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பெரும் சரிவைச் சந்திக்கும் என்று இப்போது கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன சைபர் உலக ஜாம்பவான் நிறுவனங்கள்.

கூகுளின் புதிய வசதி GOOGLE PLUS

கடந்த வாரம் இணைய உலகம் பரபரப்பானதுக்கு காரணம் கூகுள் பிளஸ்தான் என்றால் மிகையில்லை.


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள்.

கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே

சமூக வலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம்.

இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை.பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +.......

கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்.
கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.

என்னென்ன வசதிகள்?

ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.


இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

கூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா? அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் விபரங்கள் இங்கே.......

வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.

மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.

அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.

இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.

I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby

இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.

Monday, July 4, 2011

குகிளின் புதிய லேப்டாப்

  குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள்.
இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொருள் இல்லாமல் எங்கோ சேமித்து வைத்திருக்கும் மென்பொருளை இண்டர்நெட் மூலமாக பயன்படுத்துவதால் லேப்டாப்புகளின் விலை குறையும், அதிக செயல்திறன் தேவையில்லை, அடுத்ததாக விரைவாக லேப்டாப்பை உயிர்பித்து விடலாம், பேட்டரி எனப்படும் மின்சக்தி நேரமும் நீட்டிக்கலாம் என்பது போன்ற பலன்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இந்த கருத்தை பிரதிபலிப்பவர் தொழில்நுட்ப நிபுணரான ரூபர்ட் குட்வின்ஸ், இவர் ‘இசட் டி நெட்’என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். அத்தோடு இந்த புதிய நுட்பத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் தற்சமயம் உலகத்தில் இருக்கும் லேப்டாப்புகளில் 90 சதவீதம், இவர்களின் மென்பொருள் தயாரிப்புகளால் தான் இயங்கி வருகின்றன.

அதே சமயம், இண்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே பெரும்பாலான செயல்களை இந்த லேப்டாப்பில் செய்ய முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இன்னமும் உலகத்தின் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை என்பது முழுதாக கிடைக்கவில்லை, அல்லது தங்கு தடையின்றி கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் குகிளின் குரோம்நோட்புக் விற்பனை எப்படி இருக்கும் என்பது சரியாக கூற முடியவில்லை.

இதற்கிடையே, ஒரு சில நிபுணர்கள் குகிளின் இந்த லேப்டாப் புரட்சி ஒன்றும் கிடையாது, இது ஒரு பரிணாம வளர்ச்சி தான், ஏனென்றால் இன்றுள்ள நவீன செல்போன்கள், டேப்ளட் கம்ப்யூட்டர்கள் எனப்படும் சின்னஞ்சிறு கம்ப்யூட்டர்கள் எல்லாம் இந்த முறையிலேயே இயங்கி வருகின்றன என்பதை குறிப்பிடுகின்றனர்.

Thursday, June 9, 2011

கூகுள் மொபைல் மணிபர்ஸ்




சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது. 
முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும். 

இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம். 

கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம். 
பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.

இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும். 

கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே.