Saturday, December 10, 2011

நீங்க நம்பலையா? டி.வி. சேனலில் காமிக்கிறோம், கண்குளிர பாருங்கள்!

Tehran, Iran: Iran paraded what its military described as a captured C.I.A. stealth drone on national television yesterday (Thursday). The drone shown on Iran television appeared to be in good condition, which would seem to be inconsistent with an uncontrolled landing, although closer inspection of the images appeared to reveal a taped fracture on part of the wing.
John Pike, director of Global Security, a consulting firm, said in response to a query from CNN about the video images that the aircraft did not look the way he would expect it to look after a crash, fueling suspicion that the Iranians may have displayed a mock-up. Other aviation experts said the vehicle seen in the video appeared to be authentic.

சி.ஐ.ஏ.-யின் ஆளில்லாத உளவு விமானத்தை (drone) ஈரானிய ராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாகவே அமெரிக்க ஊடகங்களில் ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்கள். சி.ஐ.ஏ. விமானம் ஆப்கான் வான் பகுதியில் தொலைந்துவிட்டது. ஈரான் சொல்வது பொய் என்றெல்லாம் ஏகத்துக்கும் புலனாய்வு ரிப்போர்ட்டுகள்.

இப்படிக் குழப்பம் நிலவிக்கொண்டிருக்க, ஈரான் அதிரடியாக நேற்று (வியாழக்கிழமை) அரசு டி.வி.

டி.வி. சேனலில் காண்பிக்கப்பட்ட காட்சியின் ஒரு பிரேம். விமானத்துக்கு அருகே போஸ் கொடுப்பவர், ஈரானிய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் அமீர்-அலி ஹஜிஸாடின் (வலப்புறம் நிற்பவர்).

சேனலில் 2.5 நிமிட வீடியோ கிளிப்பிங் ஒன்றை ஒளிபரப்பியுள்ளது. தாம் கைப்பற்றியுள்ள அமெரிக்க RQ-170 விமானத்தை அதில் காட்டியது.

இப்போது என்னாகும்? ஆம். ஈரானிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் தொடங்கிவிட்டன.

ஈரானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 2.5 நிமிட கிளிப்பிங்கில் காண்பிக்கப்பட்ட விமானம், நொருங்கிப் போன நிலையில் இல்லை. வெளிப் பார்வைக்கு எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாகவே காண்பிக்கப்பட்டது. ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்ட இமேஜ்களை கவனமாகப் பார்த்தால், விமானத்தின் விங்க் பகுதியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருப்பது தெரிகின்றது. (அதில் ஸ்காட்ச் போடப்பட்டுள்ளது)

ஆனால், அது எப்படி சாத்தியம்? காரணம், ஏதோ ஒரு விதத்தில் இந்த விமானத்தை ஈரானிய ராணுவம் லேன்ட் பண்ண வைத்திருக்க வேண்டும். லேன்டிங் கன்ட்ரோல் அவர்கள் கையில் இருந்திருக்க முடியாது. இதனால் ஸ்மூத் லேன்டிங்குக்கு சான்ஸே கிடையாது, கிராஷ் லேன்டிங் பண்ணி இறக்குவதே ஒரே வழி. லெவல்டு ரன்வேயில் இறக்கியிருந்தாலும்கூட விமானத்தின் ஃபியூவலேஜ் பகுதி தரையில் மோதி சிதைவடைந்திருக்கும்.

அப்படியிருந்தும், விமானத்தை எப்படி முழுமையாகக் காண்பிக்கிறார்கள்?

(இதில் நெட்-லேன்டிங் பாஸிபிளிட்டி ஒன்று உள்ளது. அதற்கெல்லாம் இங்கே சான்ஸ் கிடையாது. காரணம் நெட்-லேன்டிங்குக்கு விமானத்தின் லேன்டிங் கியர் ஆபரேஷன் தரையில் உள்ளவர்களிடம் ரிமோட் கன்ட்ரோலில் இருக்க வேண்டும்)

குளோபல் செகியூரிடி கன்சல்டிங் அமைப்பின் தலைவர் ஜோன் பைக் சி.என்.என். நியூஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ஈரானியர்களால் காண்பிக்கப்படும் இமேஜ் பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விமானம் போலத் தெரியவில்லை. நொருங்கிப்போன விமானம் ஈரானியர்களிடம் சிக்கியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு அவர்கள் தயாரித்த டம்மி பிளேன்தான் இவர்கள் காண்பித்தது” என்று தெரிவித்துள்ளார்.

வேறு சில மிலிட்டரி ஏவியேஷன் எக்ஸ்பர்ட்டுகள், டி.வி.யில் காண்பிக்கப்பட்டது நிஜமான விமானம்தான் என்கிறார்கள். ஆனால், ஈரானியர்கள் அதை எப்படி முழுமையாக இறக்கினார்கள் என்பதற்கு அவர்களிடமும் பதில் கிடையாது.

டி.வி.யில் காண்பிக்கப்பட்ட விமானம் ஒரு மேடையில் வைக்கப்பட்டு பிலிம் பண்ணப்பட்டுள்ளது. (மேடையின் பின்புறம் ஈரானியப் புரட்சிக்கு வித்திட்ட அயதுல்லாக்களின் போட்டோக்கள்!) அந்த வகையில் விமானத்தின் பின்புற-கீழ்ப்பகுதி (ரியா் ஃபியூசலேஸ்) வீடியோவில் காண்பிக்கப்படுவதை தவிர்த்திருக்கிறார்கள். ஒருவேளை சேதம் அந்தப் பகுதியில் இருக்கலாம்.

ஈரானியர்களில் அதிஷ்டத்துக்கு, விமானம் சுயமாகவே 15-45RF லேன்டிங் (15-45 பாகை பின்சாய்ந்த அப்ரைட் லேன்டிங்) அடித்திருந்தால், 75% சிதைவடையாமல் கிடைத்திருக்கலாம்!

No comments:

Post a Comment