

முஸ்லிம்களை திட்டமிட்டு கொன்று குவிக்கும் சங்க்பரிவார ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடிவாளம் போடும் வகையில் மத்தகக் கலவரத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதைத் தடுக்கும் வகையில் தனது கண்டனத்தை ஜெயலலிதா பதிவு செய்து தான் பாசிஸ்டுகளின் பக்கமே என்பதை நிருபித்தார்...
கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அளிக்கும் சட்டம் இல்லை மேலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டாலும் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டாலும் ஊனமாக்கப்பட்டாலும் அவர்கள் மீது வழக்குகள் தான் போடப்படுகிறதே தவிர எந்த இழப்பீடும் வழங்கப்படுவதில்லை மதக்கலவர தடுப்புச் சட்டத்தில் இதற்க்கு போதுமான இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது இதித்தான் ஜெயலலிதா எதிர்க்கிறார் அதேபோல கலவரத்தை தடுக்கத் தவறும் அதிகாரிகளை தண்டிக்கசட்டத்தில் இடம் இல்லை இந்த தைரியத்தில்தான் சங்க்பரிவார அதிகாரிகள் மத வெறியுடன் நடக்கின்றனர் மதக்கலவர தடுப்புச் சட்டத்தில் இதற்கும் வழிவகை காணப்பட்டுள்ளது.இதை ஜெயலலிதா எதிர்ப்பதன் மூலம் அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்க துணை போகிறார்.



முஸ்லிம்கள் சட்டமன்றதுக்கோ நடாளுமன்றதுக்கோ போதுமான அளவில் தேர்வு செய்யப்படுவதில்லை முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கிராமங்களில் கிடைக்கும் உள்ளாட்சிப் பதவிகள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வந்த ஒரே அரசியல்அதிகாரமாக இருந்தது அதிலும் ஜெயலலிதா மண் அள்ளிப்போட்டுள்ளார் வார்டுகளை சீரமைக்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வார்டுகளையும் கிராமங்களையும் தலித் மக்களுக்கான வார்டாக ஜெயலலிதாவிற்கு வேண்டப்படவரான தமிழக தேர்தல் அதிகாரி சோ.அய்யர் என்பவர் மாற்றிவிட்டார்.
முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் முஸ்லிம்கள் பொறுப்புக்கு வரும்ன் வாய்ப்பை தடுத்துவிட்டால் அவர்க இந்துக்கள் பகுதியில் தேர்வு செய்யப்படுவார்களா கோவை ஈரோடு வேலூர் போன்ற மாவட்டங்களில் முஸ்லிகளின் உள்ளாச்சி பிரதிநித்துவம் துடைத்து எறியப்பட்டுள்ளது பல்வேறு ஊர்களில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய போராட்டங்களால் ஒரு பயனும் ஏற்ப்படவில்லை.
பத்து மாநகர மேயர்களுக்கான வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளார் அதில் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்க அவருக்கு மனமில்லை.
தனது கட்சின் சார்பில் மூன்றுபேருக்கு மட்டுமே அவர் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பளித்தார் இதுவே முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று முஸ்லிம்களுக்கு மனக்குறை உள்ளது இந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர் இறந்ததால் நடக்கும் திருச்சி இடைத்தேர்தலிலும் முஸ்லிம் வேட்ப்பாளர் நிறுத்தப்படவில்லை.
நகராட்சிக்கான வேட்ப்பாளர் பட்டியலிலும் மூவர் மட்டுமே முஸ்லிம்கள்.
இப்படி எல்லா வகையிலும் முஸ்லிம்களை ஜெயலலிதா புறக்கணிக்கின்றார்.
இதற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக கொலைகார மோடி சாது வேடம் போடுகிறான் அவனுக்க அதரவாக அறிக்கை விட்டு தனது கட்சியின் சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி முஸ்லிம்களின் நெஞ்சில் ஈட்டியை பாயச்சியுள்ளார்.
மற்ற விசயங்களில் அவர் மாறினாரா இல்லையா என்பதில் நமக்கு அக்கறை இல்லை.முஸ்லிம்களை அவர் நஞ்சென வெறுக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
அதேபோல தலித் மக்களை சர்வ சாதாரணமாக சுட்டுத்தள்ளி கடமை தவறிய காவலர்களை காப்பாற்ற நினைக்கிறார் போலீசாரால் அநியாயமாக சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தும் வெறும் வெறும் ஒரு லட்ச்ச ரூபாய் நட்ட ஈடு அவர் அறிவிதுருக்கிறார் ஜெயலலிதா ஆட்சியில் தலித் மக்களின் உயிர் அவ்வளவு மலிவாக ஆகிவிட்டது அரசாங்கத்தின் தவறு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூட நியாயம் வழங்கஜெயலலிதா விரும்பவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்படியே போனால் ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.
|
No comments:
Post a Comment