Thursday, December 1, 2011

பேஸ்புக்கில் இன்றுமுதல் சத்தமேயில்லாமல் மற்றொரு மாற்றம்

தனது நிறுவனம் பிழை செய்துவிட்டது என Facebook நிறுவுநர் மார்க் சக்கர்பேர்க் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்கக் கண்காணிப்பாளர்களுடன் பயனர்களின் தரவுகளைப் பிழையாகப் பயன்படுத்துகின்றது என Facebook மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டைச் சரிசெய்யும் நோக்கில் ஒரு பகுதியாக தனிநபர் கட்டுப்பாடுகளை பாதுகாக்க Facebook ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் ஒரு படியாக Facebook 30 நாட்களில் அதன் அழிக்கப்பட்ட கணக்குகளை மூடப்போவதாகவும் தனிநபர் விதிகளை பாதுகாக்கும் எனவும் சமஸ்டி வர்த்தக அமைப்புக் கூறியுள்ளது.

இந்த வழக்கு 2009 இல் Facebook தனது பயனாளர்களின் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படையாக்க மாற்றியபோது ஆரம்பித்திருந்தது.

சக்கர்பேர்க் தனது வலைப்பதிவில் தாங்கள் வழமையாகச் செய்யும் அனைத்தையும் தெளிவாகச் செய்வதாகவும் ஒருவரது தகவல்களைப் பார்க்கும் மற்றவருக்கு இன்னும் கட்டுப்படுத்தக்கூடிய கருவிகளை உருவாக்கத் திட்டமுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தகவல்களை பார்க்க வேண்டியவரால் மட்டுமே அவற்றைப் பார்க்கமுடிகின்றது என்பதையும் உறுதிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் மார்ச்சில் கூகிளிற்கும் சமஸ்டி வர்த்தக அமைப்புக்கும் இடையில் இடம்பெற்றதை ஒத்ததாகவே காணப்பட்டது.

கடந்த வருடம் இந்த அமைப்பு தனது பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்பதற்காக ருவிட்டருடனும் ஓர் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.

No comments:

Post a Comment