Monday, December 12, 2011

டில்லியில் அகப்பட்ட பாகிஸ்தான் பெண் உளவாளி! சரி.. நிஜ கதை என்ன?

Delhi Police today (Monday) claimed to have foiled an ISI plan to ensure smooth operations by a woman spy in the country. Imran and Soofia Kanwal, were apprehended from New Delhi Railway Station on a tip off, according to Delhi Police.


The passports of Imran and Kanwal issued by Pakistan but having no Indian VISA and neither stamp of entry into India, National Identity Card of Imran, Citizenship card of Kanwal, a driving license of Gujarat in the name of Imran, an Election Identity card issued in the name Imran and other documents were recovered.

இந்தியாவுக்குள் பாகிஸ்தானிய பெண் உளவாளி ஒருவரை வைத்து இயக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையின் திட்டத்தை முறியடித்திருப்பதாக அறிவித்துள்ளது டில்லி போலீஸ். இந்தத் திட்டத்துடன் தொடர்பாக ஒரு பெண், மற்றும் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்த ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

40 வயதான இம்ரான், மற்றும் 38 வயதான சூஃபியா கான்வால் ஆகிய இருவர் பற்றிக் கிடைத்த தகவலை அடுத்து, இருவரையும் டில்லி ரெயில்வே ஸ்டேஷனில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குள் இமிகிரேஷன் கன்ட்ரேல் நடைமுறைகள் ஏதுமின்றி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறையான இந்திய விசாவுடன் நாட்டுக்குள் வரவில்லை.

இரு பாகிஸ்தான் பிரஜைகளை இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் அனுப்புவதற்கு பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ.ஐ. திட்டமிட்டுள்ள விபரம் முதலில் இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது. அதையடுத்து இந்திய-நேபாள எல்லைப் பகுதி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த இருவரும் கோரக்பூரிலுள்ள சனோலி எல்லை வழியாக உள்ளே புகுந்தபோது, இருவரையும் உடனே கைது செய்யாமல், நாட்டுக்குள் வருவதை கண்டுகொள்ளாமல் விட்டது இந்திய உளவுத்துறை. இந்தியாவுக்குள் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்படிச் செய்திருக்கலாம்.

இந்தியாவுக்குள் வந்துவிட்ட இருவரும், டில்லி செல்வதற்காக கொரக்தாம் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறியபின், அவர்களை டில்லி ரெயில்வே ஸ்டேஷனில் கைது செய்யுமாறு, டில்லி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்படித்தான் இந்த இருவரையும் டில்லி போலீஸ் கைது செய்தது.

இவர்களை விசாரித்தபோது, இம்ரான் அகமதாபாத்தில் முன்பு வசித்ததாகவும், அங்கிருந்து 1988-ல் பாகிஸ்தானுக்கு குடியேறியதாகவும் கூறியிருக்கிறார். பாகிஸ்தானில் சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது அவரைத் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் உளவுத்துறை, தமக்காக சில காரியங்களை செய்து கொடுத்தால், வியாபாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல பணம் கொடுப்பதாக கூறியிருக்கின்றது.

இவரும் சம்மதிக்கவே, அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட், அவர்கள் அனுப்பி வைக்கும் பெண் உளவாளி ஒருவரை பத்திரமாக அழைத்துச் சென்று இந்தியாவில் செட்டில் பண்ணி விடுவதுதான். இந்த பெண், இந்தியாவில் இருந்து இயங்கும் பாகிஸ்தானிய உளவாளியாக செயற்படுவதுதான் திட்டம்.

அப்படி அனுப்பப்பட்ட பெண்தான் இம்ரானுடன் பயணம் செய்து அகப்பட்டுக்கொண்ட சூஃபியா கான்வால்.

இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் உளவுத்துறையே வழங்கியுள்ளது. ஆனால், அந்த பாஸ்போர்ட்டுகளில் இந்திய விசா கிடையாது. அத்துடன், இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் என்று காட்டுவதற்காக, ஐ.எஸ்.ஐ. சில இந்திய ஐ.டி.-களையும் கொடுத்திருந்தது. இம்ரான் பெயரில் இந்திய நேஷனல் ஐடென்டிட்டி கார்டு, குஜராத் டிரைவிங் லைசென்ஸ், எலக்ஷன் கார்டு, சூஃபியா கான்வால் பெயரில் இந்திய பிரஜாவுரிமை கார்டு ஆகியவை வழங்கப்பட்டே இவர்கள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் சரி. டில்லி போலீஸ் கில்லாடிகள்தான். ஆனாலும், நமக்குத்தான் சந்தேக புத்தி!

உளவுத்துறை வட்டாரங்களில் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், ட்ரிக் ஒன்று செய்வதில் பிரபலமானவர்கள். அவர்கள் செய்யும் ட்ரிக் என்ன தெரியுமா? கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே சிலரை அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பப்படும் ஆளுக்கு தன்னை பலியாடாக அனுப்புகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கும். அந்த நபருக்கு தவறான தகவல்களை நிஜம்போல சொல்லியிருப்பார்கள். குறிப்பிட்ட நபர் சிக்கிக் கொள்ளும்போது, தனக்கு தெரிந்த ‘உண்மைகளை’ கூறி விடுவார்.

அதே ஸ்டைலில் ஐ.எஸ்.ஐ,-யும் ஏதாவது செய்ய முயல்கிறதா?

இதை ஏன் சொல்கிறோம் என்றால், இந்திய இமிகிரேஷன் கன்ட்ரோலை கடக்காமல் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட இவர்களுக்கு, எதற்காக பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பியது ஐ.எஸ்.ஐ.?

சரி, அதை விடுங்கள். இந்தியப் பிரஜையாக காண்பிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்த பின்னரும், எதற்காக பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் (அதுவும் இந்திய விசா, இந்திய என்ட்ரி ஸ்டாம்ப் ஏதும் இல்லாமல்) தம்முடன் வைத்திருந்தார்கள்?

No comments:

Post a Comment