Monday, November 21, 2011

போதை தந்தையால் கையை பறிகொடுத்த மகள்


போதை தந்தையால் கையை பறி கொடுத்த கமுதி மாணவி தனலெட்சுமி, செயற்கை கை வேண்டி மருத்துவ முகாம்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி, 14. ராமநாதபுரம் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், நவீன செயற்கை கை வேண்டி பங்கேற்றார்.


கமுதி அருகே எருமை குளம் சொந்த ஊர். தந்தை முத்துராமலிங்கம் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தாய் கிருஷ்ணம்மாளை கொடுமை படுத்தினார். ஒரு நாள் சண்டை முற்றியது. தாயின் தலை, தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார். தட்டிக்கேட்ட என் கையையும் வெட்டினார். தற்போது வலது முழங்கை வரை இழந்து தவிக்கிறேன். 
அம்மா, விறகு சுமக்க செல்வார். தங்கை அரியநாச்சி கமுதி அருகே மில்லில் வேலை பார்க்கிறார். நான் மட்டுமே படிக்கிறேன். ஊரில் படிக்க வசதியில்லை. ராமநாதபுரம் ஆஞ்சலோ விடுதியில் தங்கி படிக்கிறேன். சுவார்ட்ஸ் பள்ளி ஆசிரியர் ஜெபாஸ்டின், வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். நவீன செயற்கை கை தந்தால், உதவியாக இருக்கும். வருங்காலத்தில் போலீசில் சேர்ந்து குடிகாரர்களை திருத்துவதே தன் லட்சியம், என்றார்.

No comments:

Post a Comment