Monday, November 21, 2011

இனி திருமணங்களில் வீடியோ கூடாது - திடீர் தடை

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள "குரேஷி' சமூகத்தினர், தங்கள் ஜாதியினர் நடத்தும் திருமணங்களில் ஆடம்பர, அனாவசிய செலவுகள் கூடாது என, தடை விதித்துள்ளனர். 
 
"குரேஷி' சமூக பஞ்சாயத்தின் தலைவர் ஹாஜி ஜமீல் கூறுகையில், ""உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் எங்களின், "குரேஷி' சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். நாங்கள் நடத்திய சமுதாய பஞ்சாயத்து கூட்டத்தில், 60 கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த 2,000 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், குரேஷி சமூகத்தினர் ஆடம்பரத் திருமணங்களையும், திருமணங்களின் போது செய்யப்படும் அனாவசிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிக அளவில் வரதட்சணை கொடுப்பது, வீடியோ படம் எடுப்பது, பட்டாசுகள் வெடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த விரைவில் ஆலோசனைக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும். தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment