Tuesday, July 5, 2011

தந்தை, அண்ணனுக்கு உறுப்பு தானம் செய்ய சிறுமி தற்கொலை

தந்தை மற்றும் சகோதரனுக்கு தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்காக ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டாள். தனது உறுப்புகளை அவர்களுக்கு பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துள்ளாள்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா பகுதியைச் சேர்ந்தவர் மிருதுல் சர்கார். கூலித் தொழிலாளி. இவருக்கு மோனோ ஜித் (14) என்ற மகனும், மம்பி சர்கார் (11) என்ற மகளும் உள்ளனர்.

தான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகள் மிருதல் சர்கார் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு கண் பார்வை மங்கத் துவங்கியது. மருத்துவரை அணுகியபோது கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் அவரது மகன் மோனோ ஜித்தின் சிறுநீரகம் ஒன்று பழுதடைந்தது. இன்னொன்றும் வேகமாகப் பழுதடைந்து வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படும் மிருதுல் சர்காரால் இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பணம் திரட்ட முடியாது. இதை உணர்ந்த அவரது மகள் மம்பி தந்தைக்கு கண்ணும், சகோதரனுக்கு சிறுநீரகமும் கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள். உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருந்த அவள் சட்டென்று ஒரு முடிவு எடுத்தாள்.

வீட்டில் தனியாக இருந்த டிம்பி தனது கண்ணை தந்தைக்கும், சிறுநீரகத்தை சகோதரனுக்கும் பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.

வீணான உயிர்த் தியாகம்! சிறுமி திடீர் என்று தற்கொலை செய்து கொண்டது அவள் குடும்பத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. அவர்கள் சிறுமியின் உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் எழுதிய கடிதத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர். மொத்தத்தில் சிறுமி செய்த உயிர்த் தியாகம் யாருக்குமே பலன் இல்லாமல் அநியாயமயாக அவளது உயிரை மட்டும் பறித்துக் கொண்டு வீணாய்ப் போய் விட்டது.

No comments:

Post a Comment