Monday, June 27, 2011

தம்பதியர் ஒற்றுமைக்கு வழி

ஒருசமயம் கலீபா உமர்(ரலி) அவர்களிடம், ஒருவர் வந்தார். அவர் தனது குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அந்த மனிதர் திரும்பிச்செல்ல முனைந்தபோது, அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டார்கள்.
அம்மனிதர் தம் குடும்பச்சண்டையை மனமின்றி சொன்னபோது, உமர்(ரலி) அவர்கள், ""என் இல்லத்தரசி, எனக்கும் நரகத்திற்கும் இடையில் தடையாக இருக்கிறாள். எனது ஆடைகளைத் துவைக்கும் வேலைக்காரியாக இருக்கிறாள். பிள்ளைகளை ஆதரிக்கும் தாயாகவும் இருக்கிறாள். எனக்குரிய பொருள்களை நான் வெளியே சென்றிருக்கும் போது பாதுகாப்பவளாகவும் இருக்கிறாள். எனவே, அவள் கோபப்படும் போது நான் அவளை மன்னித்து விடுகிறேன். 

பொறுமையும் அடைகிறேன் என்று கூறியதைக் கேட்ட அம்மனிதர், நானும் என் மனைவியை மன்னித்து விட்டேன்,'' என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டார்.

ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்,ஒரு தோழர், ""அண்ணலாரே! எனது மனைவியின் நாவு நீளமாயிருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் அடிக்கடி சண்டை பிடிக்கிறாள்,'' என்றார்.
உடனே அவர்கள், அந்த தோழரின் உள்ளத்தைச் சோதிப்பதற்காக, ""அப்படியானால் உமது மனைவியை தலாக் சொல்லிவிடும்,'' என்றார்கள்.
உடனே அந்தத் தோழர்,""எனக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். எனது வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள்,'' என்று கூறியபோது, ""அப்படியானால், அவளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறும். இந்த நற்செயலை விட்டுவிட்டு மனைவியை ஆடுமாடுகளை அடிப்பது போல் அடிக்காதீர்,'என்று அண்ணலார் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

No comments:

Post a Comment