Monday, June 27, 2011

லேப்டாப் அம்சங்களை காணலாம்

தமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டரை இலவசமாகத் தர இருக்கும் திட்டம் இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரிடமும் நாமும் ஒரு லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. பொறியியல் பட்ட வகுப்புகள் மற்றும் எம்.பி.ஏ. பிரிவுகளில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்ட நிலையில், அறிவியல் மற்றும் கலைப் பாடங்கள் பிரிவுகளில் பயிலும் மாணவர்களும், லேப் டாப் கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்த முனைகின்றனர். 

லேப்டாப் ஒன்றை வாங்குகையில் என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.

தேவையானவை:

1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப்டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்தவும், தகவல்களைத் தேடவும் இதனைப் பயன்படுத்தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
2. குறைந்த எடை: ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நூல்களும் மற்ற தேவைகளும் கொண்டு செல்கையில், ஒவ்வொரு மாணவரும் கணிசமான எடையைத் தூக்கிச் செல்ல வேண்டும். எனவே மிகக் குறைந்த எடையுள்ள லேப் டாப் கம்ப்யூட்டரையே நாம் தேர்ந்தெடுப்பது, அதனை எப்போதும் எடுத்துச் சென்று பயன்படுத்த வழி வகுக்கும்.
3. கீ போர்டு வசதி: கற்பதற்கு ஒரு கருவியாய் லேப் டாப் மாணவர்களுக்குப் பயன்பட இருப்பதால், அதிகமாக இதில் டைப் செய்திடும் வேலை இருக்கும். மேலும் ஆன்லைன் சேட்டிங், பேஸ்புக், ட்விட்டர் என மாணவர்கள் எந்நேரமும் செல்லும் தளங்கள் இருக்கும். எனவே டைப் செய்திடும் வேலையை எளிதாக்கும் கீ போர்டு இருப்பது நல்லது. 
4. அதிக திறன் கொண்ட வெப்கேமரா: இப்போது வரும் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களும் வெப் கேமரா இணைக்கப்பட்டே கிடைக்கின்றன. ஆனால் அனைத்தும் ஒரே வகையான திறனுடன் இருப்பதில்லை. ஆன்லைன் சேட்டிங் அல்லது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் என எதில் ஈடுபட்டாலும், குறைந்த ஒளியிலும் சிறப்பாக உங்களைக் காட்டும் திறனுடன் கூடிய வெப் கேமரா உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெறவும்.
5. வாரண்டி: லேப்டாப் பார்ப்பதற்கு மென்மையானதாக இருந்தாலும், மாணவர்கள் அதனைச் சற்றுக் கடுமையாகவே கையாள்வார்கள். பைகளில் வைத்து எடுத்துச் செல்வதும், பைகளில் லேப்டாப் உள்ளது என்று அறியாமல், பைகளைக் கையாள்வதும் மாணவர்களுக்கே உரித்தான செயல்பாடு. எனவே சற்று கடினமான பாதுகாப்பு சுற்றுப் புறங்களைக் கொண்ட லேப்டாப்களை வாங்குவது நல்லது. எதனையும் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இருக்கும். எனவே அதிக காலம் வாரண்டி தரும் திட்டத்துடன் வரும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு லாபமே.
6. இயக்கப் பாதுகாப்பு: கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை அதிகம் திருடப்படுவது லேப்டாப் கம்ப்யூட்டர்களே. கவனக் குறை வால் தொலைக்கப்படுவதும் அவையே. எனவே தொலைந்து போனாலும், திருடப்பட்டாலும் அவற்றைத் திரும்பப் பெற வழி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்ட லேப்டாப்கள் இந்த வகையில் நமக்கு கை கொடுக்கும். அதே போல நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதில் பதியப்பட்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும். 

தேவையற்றவை:
1. குவாட் கோர் ப்ராசசர்: குவாட் கோர் ப்ராசசர் இயக்கம் கொண்ட லேப்டாப் நமக்கு நல்லதுதான். ஆனால் மாணவர் நிலையில் கம்ப்யூட்டர் இயக்குபவர் களுக்கு டூயல் கோர் சி.பி.யு. கொண்ட கம்ப்யூட்டரே போதும். இவை பயன்படுத்தும் மின்சக்தி குறைவு; விலையும் குறைவு. அதே நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் கை கொடுக்கும். 
2. அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ்: நல்லதொரு கிராபிக்ஸ் சிப் எந்த கம்ப்யூட்டரிலும் ஒரு நல்ல நண்பன் தான். வீடியோ காட்சிகள் தெளிவாகக் கிடைத்திட, வேகமாக இணைய உலா செல்ல, முப்பரிமாண விளையாட்டுக் களை இயக்கி விளையாட, என இதன் பயன்களைப் பட்டியலிடலாம். ஆனால் அதே நேரத்தில் சில பாதகமான அம்சங்களும் இதில் உள்ளன. இவை இயங்கும் போது அதிக வெப்பம் உருவாகும்; பேட்டரி சக்தி விரைவில் குறையும்; சிஸ்டத்தின் எடையை அதிகரிக்கும்; பெரிதாக்கும். நிச்சயம் விலையும் அதிகரிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு கிராபிக்ஸ் கார்டைப் பெறுவது நல்லது. 
3. சாலிட் ஸ்டேட் ட்ரைவ்: வழக்கமான ஹார்ட் ட்ரைவ்களைக் காட்டிலும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், சற்று அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையே. நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியவை. ஆனால் இதனால் இன்றையச் சூழலில் விலை அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பல வகைகளில் சிறந்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது சற்று அதிகம் தான். 
4. டச் ஸ்கிரீன்: இன்றைக்கு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டாலும், மொபைல் போனை எடுத்துக் கொண்டா லும், தொடு திரை இயக்கத்தினயே அனைவரும் நாடுகின்றனர். ஆனால் லேப்டாப்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இன்னும் டச் ஸ்கீரின் இயக்கத்திற்குத் தயாராகவில்லை. எனவே இதனை இன்னும் சில காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.

No comments:

Post a Comment