Friday, April 29, 2011

புதிதாக 31 தொலைக்காட்சி சேனல்கள், 806 எப்.எம். ரேடியோ ?


நாட்டில் புதிதாக 806 எப்.எம். ரேடியோ துவங்க விரைவில் மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி நேற்று தெரிவித்தார். 
டெல்லியில் பிரஸ் கவுன்சில் சார்பில் கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி பேசியதாவது:

நாட்டில் இது வரை 653 தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இன்னும் 31 புதிய சேனல்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. விரைவில் 283 நகரங்களில் மொத்தம் 806 புதிய எப்.எம். ரேடியோ துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 

உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, மற்ற நாடுகளில் பத்திரிகை துறையிலும் சரிவு காணப்பட்டது. ஆனால், இந்தியாவில் பத்திரிகை துறை 6.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. சமீப காலமாக, பத்திரிகைகள் வாசிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளில் செய்தித் தாள் வாசிப்போர் எண்ணிக்கை பல லட்சம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அம்பிகா சோனி பேசினார்.

No comments:

Post a Comment