Tuesday, December 14, 2010

ஆன்லைன் டிரேடிங்- சுலபமாக அதிகம் பணம் சம்பாதிப்பது எப்படி?


இன்று ரியல் எஸ்டேட் தான் ஹாட் பிசினஸ்.பணம் இருக்கும் போது ஒரு இட்த்தை அது காடு,மலை எதுவேணா இருக்கட்டும்..வாங்கி போடுங்க..சில வருடங்களில் அது ஃபிக்சட் டெபாசிட்டை விட..பல நுறு மடங்கு அதிக வட்டியுடன் லாபத்துடன் நிற்கும்.பத்து வருசத்துக்கு முன்னாடி இந்த இட்த்தை செண்ட் நாலாயிரம் ரூபாய்க்கு வேணுமான்னு கேட்டாங்க..காடா இருக்கு..இங்க போய் வீடு கட்டுறதான்னு நினைச்சேன்..இன்னிக்கு அதே இடம் செண்ட் ரெண்டு லட்சத்துக்கு கேட்டாலும் இடம் இல்லை ..யாரும் விக்குறாப்புல இல்லைங்கறான்னு பலரும் புலம்புவதை கேட்கிறோம்.

ஆனா ஷெர் மார்க்கெட் இதே அளவுக்கு நமக்கு லாபம் தருது.நாம் ஷேர் மார்க்கெட் பற்றி..நிறைய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.எனது நண்பர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு,வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வைத்துக்கொண்டு எப்போதும் தட்டிக்கொண்டே இருப்பார்.ஏய்யா ஏதாவது வேலைக்கு போகலாமில்ல..வீட்லியே இருக்கிறது போரடிக்காதா..?என்னதான் அப்பா சம்பாதிச்ச சொத்து இருந்தாலும் உன் செலவுக்கு ஏதாவது சம்பாதிக்க வேண்டியது தானே னு கேட்டா,அதைத்தான் இப்ப செஞ்சிகிட்டு இருக்கேன்..ஷேர் மார்க்கெட்ல..சில பங்குகள் தினசரி விலை மாறுதல் ஏற்படும்.அதை கவனிச்சு ஒரு வாரம் என் பணத்தை போட்டு வெச்சி எடுத்துடுவேன்..

உதாரணமா..30 ரூபாய் பங்கு 50 வாங்கினா ஒரு வாரம் கழிச்சி அந்த பங்கு 37 க்கு போனா 350 லாபம்.இது மாதிரி சின்ன சின்ன லாபம்கிடைக்கிற மாதிரி வாரத்துக்கு 25,000 ரூபாய் பங்குகளை வாங்கி விற்கிறேன்.இது வரை நஸ்டம் இல்லை.ஒண்ணுல நஸ்டம்னாலும் ஒண்ணுல லாபம் கிடைச்சிடும்னார்.வாரம் 2000 ரூபாய் கியாரண்டியா கிடைச்சிடுது என்றார்...ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா,தமிழக அரசு அறிக்கையை ,இலவச திட்டங்களை ஃபாலோ செஞ்சா நிறைய சம்பாதிக்க முடியும்னு தோணுது..

இலவச வீடு கட்டி தரப்படும்னு சொன்னாங்க..கட்டிடப்பொருட்கள் எல்லாமே கிடுகிடுன்னு விலை ஏறுச்சு.ஒரு செங்கல் 3 ரூபாய்க்கு விற்பனை ஆனது,இந்த அறிவிப்புக்கு பின்,6,7 ரூபாய் என கடுமையாக விலை ஏறி விட்டது.சிமெண்ட்,மணல்,ஜல்லி எல்லாமே இதே கதைதான்.காரணம் என்ன விலை சொன்னாலும் அரசு வாங்கிக்கும் என்ற உற்பத்தியாளர்களின் பேராசைதான் காரணம்
.
இப்போ அதே மோசடி வேறு ரூபத்தில் வந்திருக்கிறது.

பொங்கல் பரிசாக வெல்லம்,ஏலக்காய்,முந்திரி பச்சரிசி பொன்றவற்றை இலவசமாக ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உடனே வெல்லம் 10 ரூபாய் விலை ஏறிவிட்ட்து..
இந்த அறிவிப்புக்கு முன் சேலம் வெல்லத்தின் விலை =35 ருபாய்.
அறிவிப்புக்கு பின் விலை=45.
வேலூர் வெல்லத்தின் விலை=45 –லிருந்து 55 ஆக உயர்ந்திருக்கிறது.
முந்திரி =முதல் கிரேடு 50 ரூபாயும்,இரண்டாம் ரக முந்திரி 100 ம் அதிகரித்திருக்கிறது
.
தமிழக அரசு ரேசன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவசமா தரணும்னா உற்பத்தியாகும் அனைத்து வெல்லத்தையும் வாங்கினாத்தான் முடியும்.அப்போ எவ்வளவு விலை வெச்சாலும் வாங்கித்தானே ஆகணும்?
அதுதான் உற்பத்தியாளர்களின் பேராசை..
இதனால சில பதுக்கல்காரர்கள்..மொத்தமா வெல்லத்தை வாங்கி ஸ்டாக் வெச்சிட்டாங்க.
.
இப்போ பொங்கலப்போ நல்ல விலைக்கு விற்பாங்க.45 விலையில இருந்தப்ப,1000 கிலோ வாங்கி போட்ருந்தா.,பத்து நாள்ல..பத்தாயிரம் ரூபா லாபம் கிடைச்சிருக்கும்னு எனக்கே தோணுச்சு.பழம் தின்னு கொட்டை போட்ட பதுக்கல்காரன்,ஊழலில் திளைக்கும் அரசியல்வாதி எத்தனை சம்பாதிச்சிருப்பான்?

ஆன்லைன் டிரேடிங் செய்யும் பெருச்சாளிகள் இது போலத்தான் துவரம்பருப்பு,அஸ்கா,அரிசி மூட்டைகளை கொள்ளை அடிக்குதுங்க..ஆன்லைன் விறபனையை தடை செஞ்சாலும்..இது போன்ற அரசு அறிவிப்பு பிண்ணணியில் அடிக்கும் கொள்ளைகளை தடுக்க முடியாது..அரசு நாளைக்கு அறிவிக்கப்போகுதுன்னா இன்னிக்கே தெரிஞ்சு ..வெச்சிக்கிற ஆளுங்க மூலமா இன்னும் அதிகமா கொள்ளை அடிக்கப்படும்..!
.அரசு ஏழைகளுக்கு செய்றேன்னு செய்றது எல்லாம் நடுத்தர மக்களுக்கு வினையாத்தான் முடியுது.

No comments:

Post a Comment