Tuesday, December 14, 2010

மன்மதன்அம்பு நான் ரசித்த கமல்


.கமல் படங்களில் நகைச்சுவை எனக்கு பிடிக்கும்.திணிக்கப்படும் நகைச்சுவை கமல் படங்களில் அதிகம். உதாரணம் மகராசன்.ஆனாலும் அந்த படத்தில் பானுபிரியாவுடன் கமல் செய்யும் லீலைகள் செம சூடேற்றும் ரகம்.பானுபிரியா ஏற்கனவே கட்டளை படத்தில் சத்யராஜுடன் அடிக்கும் லூட்டிகள் செமையாக இருக்கும்.இதிலும் மன்மதன் கமலுடன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..
எனக்கு பிடித்த கமல் படங்கள் தொடர் எழுத அழைத்த நண்பர் ராஜாவுக்கு நன்றி.

மைக்கேல் மதன காமராஜன் கமல் பட நகைச்சுவைகளில் இயல்பானவற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என நினைக்கிறேன்..திரிபுர சுந்தரி என அவர் உச்சரிப்பது அழகு.பிராமணர் கெட்டப்பில் பிராமணராகவே பாடிலாங்குவேஜ்,டயலாக் டெலிவரி என மாறி மாறி அசத்தி இருப்பார்.திருட்டு கிழவி,டெல்லிகனேசுடன் சாம்பார்ல மீன் பிடிக்கும் காட்சி,பீம்பாய் சீன்,நாகேஷ்  கெஞ்சல்,க்ளைமாக்ஸ் வீடு என மறக்க முடியாத காட்சிகள்...படத்தில் நாலு கமல்.குஷ்பூ இருந்தாலும் ஊர்வசி தான் மனதில் நிற்கிறார்.சீனுக்கு சீன் காமெடிதான்.

சிங்காரவேலன் குஷ்பூ வின் வனப்புகளை விருந்து வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் போல இருந்தாலும்,கவுண்டமணியுடன் கமல் செம காம்பினேசன்.புல்லாங்குழல் வாசித்த பெரியவருக்கு குஷ்பூ முத்தம் கொடுத்து விட்டு போக இடை மறித்த கவுண்டர் ,கமல் கைய பிடித்து அட..இங்க ஒண்ணு கொடுத்துட்டு செவசெவன்னு வெச்சிருக்கான் பாரு என்பார் சூப்பர் சீன்.பொய்..பொய்யாக சொல்லி குஷ்பூவை டாவடித்து கல்யாணம் செய்து கொள்வதுதான் கதை..நீ எதுக்கு மெட்ராஸ்க்கு வந்த..? என கவுண்டர் கேட்க..அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என கமல் சொல்வார்..ஆஹா இதுவல்லவோ லட்சியம் என கவுண்டர் லந்து பண்ணுவார்.

வறுமையின் நிறம் சிவப்பு..தெசிய விருதுக்காகவே .எடுக்கப்பட்ட படம் மாதிரி...இருக்கும்..படத்துல அநியாயத்துக்கு வறுமை..சாக்கடையில் விழுந்த ஆப்பிளை கமல் எடுத்து கழுவி திங்க முயற்சிப்பது போன்ற படா படா பட்டினி கதை..அழகான ஸ்ரீதேவி...சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..என்ன அருமையான வரிகள்....கமல் நடிப்பு இந்த படத்தில் க்ளாஸ்..

காக்கி சட்டையில் அம்பிகா கமலை துரத்தி துரத்தி டாவடிப்பார்.கமலுக்கு போலீஸ் ஆவதே லட்சியம்..அந்த முயற்சி தோத்து போக கடத்தல் கும்பலில் சேர்ந்து படா திருடன் ஆவார்.சத்யராஜ் தலைவன்.தம்பி தகடு எங்க..தகடு தகடு..சத்யராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வைத்த படம்..கமலை சத்யராஜ் ஓரம்கட்டிய சீன்.சாராயகடையில் கமல் போடும் குத்தாட்டம் செம மசாலா.

நாயகன் ,மும்பையில் வாழ்ந்த மக்களுக்கு நல்லது செய்த தாதா வின் வாழ்க்கையை படமாக எடுத்தார் மணிரத்னம்.சாதாரண மனிதன் சூழ்நிலையால் தாதா ஆகும் கதை..கமல் நடிப்புக்கு தீனி போடும் சீன்கள் நிறைய...நீங்க நல்லவனா கெட்டவானா....தெரியலையேம்மா..காலம் கடந்து நிற்கும் டயலாக்.

குணா படம் சரியாக போகா விட்டாலும் குணா குகை என ஒரு இடம் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே மாறி இருக்கிறது..கண்மனி அன்புடன் காதல் நான் எழுதும் கடிதம்...அனைவராலும் இன்றும் பேசப்படும் பாடல் வரிகள்..தன் அன்பு எப்படிப்பட்டது என கமல் தவிக்கும் சீன்கள் அபாரம்.

இந்திரன் சந்திரன் மேயராக கமல் வினோதமான முக பாவனையுடன் ஒரு கெட்டப்.மீசையில்லாத ரொமான்ஸ் கமல் ஒரு கெட்டப்.வில்லன் கமலாக மேய்ர் தூள் கிளப்பி இருப்பார்.அவர் செய்யும் ஊழலை கண்டுபிடித்து ,அவரை சிக்க வைக்க விஜயசாந்தியுடன் கமல் போராடுவார்...மேயர் கமலை எனக்கு பிடித்திருந்தது.

சத்யா லேசான தாடியுடன் அந்த முரட்டு கமலை மறக்கவே முடியாது...ராம் கோபால் வர்மா படமா என தெரியவில்லை..அமலாவுடன் அவர் பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டே வரும் பாடல் காட்சி இன்றும் பிரபலமாக பல சினிமாக்களில் பயன்படுத்தபடுகிறது...தந்தையை கடுமையாக வேலை வாங்கும் முதலாளியை ரெண்டு தட்டு தட்டும் சீன் சூப்பர்.

தேவர் மகன் சிவாஜியுடன் கமல் என்ன ஒரு அருமையான காம்பினேசன்..சிவாஜி மீசை....போற்றி பாடடி பெண்ணே ..மறக்க முடியாத சீன்கள்..வடிவேலு குணசித்திர நடிப்பில் கலக்கி இருப்பார்.போதும்ய்யா..போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்க என்ற வசனம் பல பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனம்.வெறும் காத்துதான் வருது என ரேவதி பேசிய வசனம் இன்னும் சூப்பர்

மகாநதி ஒரு தகப்பனின் மோசமான சூழ்நிலையை படம் பிடித்து காட்டிய படம்..இந்த சூழ்நிலை எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது என பயமுறுத்திய படம்..இதை கமல் தவிர யார் செய்தாலும் எடுபடாது..ஒரு தகப்பனுக்குள் இருக்கும் தாய்மையையும் எடுத்துகாட்டிய படம்..

கமல் படங்களை வகைபடுத்தி ரசனையான காட்சிகளை அசை போடுவதென்பது முடியாத காரியம் எனென்றால் அந்த படங்கள் நம்முடனே வாழ்ந்து வருகின்றன.கமல் நடிப்பு என்பது உணர்ச்சி கலவை மட்டுமல்ல..பல சூழ்நிலைகளில் நம்மையே கண்ணாடியில் பார்ப்பது போன்று இருக்கும்

No comments:

Post a Comment