Wednesday, December 29, 2010

இந்தியா எப்போது இந்த அளவு வேகத்துக்கு மாறப்போகிறதோ


ஆம்ஸ்டர்டாம்: நம்ம ஊரில் பிராட்பேண்ட் சர்வீஸின் வேகம் இன்னும் 256 Kbps-லேயே நொண்டியடித்துக் கொண்டிருக்க, பல வெளிநாடுகளில் 100 mbps -க்கும் அதிகமான வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் வசூலிக்கப்படுவதை விட குறைந்த தொகையே அங்கெல்லாம் வசூலிக்கப்படுவதாக சொல்கிறார்கள். இப்போதுதான் இந்தியால் 4 Mbps, 8 Mbps என்று வேகம் சற்றே அதிகப்படுகிறது. ஆனால் கட்டணம் தீட்டிவிடுகிறார்கள்.

ஆனால் கூகுள் நிறுவனம் தனது ஃபைபர் நெட்வொர்க் மூலம் 1 GB வேகம் கொண்ட அதிநவீன பிராட்பேண்ட் இணைப்புகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது.
இந்த அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியைப் பெறும் முதல்நாடு நெதர்லாண்ட்ஸ்தான்.
முதல் கட்டமாக நெதர்லாந்தின் ரெஜிஃபைபர் நிறுவனம் கேபிஎன் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளத கூகுள்.
இதன் மூலம் தனது 3 லட்சம் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும், எஃப்டிடிஎச் மூலம் ஒரு ஜிபி வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவை வழங்க ரெஜிஃபைபர் திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக ஸீவோர்ல்ட் நகரம் இந்த சேவையை பெற உள்ளது.
அமெரிக்காவிலும்…
கூகுளின் இந்த புதிய திட்டத்தை அமெரிக்காவில் செயல்படுத்துமாறகு ஒபாமா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டுதான் கூகுள் இயங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அமரிக்காவின் அழைப்பை ஏற்று, போர்ட்லேண்டில் முழுமையான 1 ஜிபி பிராண்ட்பேண்ட் சேவையை கூகுள் வழங்குகிறது.
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டுக்குள் 5 லட்சம் வீடுகளுக்கு 1 ஜிபி பிராண்ட்பேண்ட் வசதி தரப்பட்டுவிடும் என கூகுள் அறிவித்துள்ளது.
இதற்கு தோதாக நாடு முழுவதும் புதிய ஆப்டிகல் பைபர் கேபிள்களை மாற்ற அமெரிக்க நகர மேயர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நம்மாளுங்க இன்னும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் பஞ்சாயத்தையே முடிப்பதைக் காணோம்.. எல்லா வசதிகளையும் கொண்ட இந்தியா எப்போது இந்த அளவு வேகத்துக்கு மாறப்போகிறதோ

No comments:

Post a Comment