Sunday, December 4, 2011

இது சூர்யா விஜய்க்கு செய்த பச்சை துரோகம் போன்றது அல்லவா?

1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார் .படத்தில் இவருக்கு விஜய்க்கு இணையான வேடம் வழங்கப் பட்டிருந்தது .விஜய் ஜோடியாக கௌசல்யாவும் சூர்யா ஜோடியாக சிம்ரனும் நடித்தனர் .விஜயின் பாடல்களை விட சூர்யா நடித்த பாடல்களே பிரபல்யம் பெற்றன .’மனம் விரும்புதே உன்னை ‘ அந்த கால பெண்களை கொள்ளையிட்ட பாடல் .விஜய் அப்போது பூவே உனக்காக ,லவ் டுடே கொடுத்த ஹிட் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் .அந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகும் ஒருவருக்கு தனக்கு சமனான வேடத்தை வழங்கியது மட்டுமில்லாமல் சிறந்த பாடல்களையும் விட்டு கொடுக்க காரணம் என்ன .எந்த ஒரு நடிகனாவது அப்படி செய்வாரா ?.விஜய் அப்படி செய்ய காரணம் என்ன.?.சூர்யா விஜயின் நண்பன் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது .(நேருக்கு நேர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம் ).


பின்னர் சூர்யா காதலே நிம்மதி,சந்திப்போமா,பெரியண்ணா,பூவெல்லாம் கேட்டுப் பார் ,உயிரிலே கலந்தது என ஐந்து படங்களில் நடித்தாலும் எதுவுமே சூர்யாவுக்கு கை கொடுக்கவில்லை .பெரியண்ணா கப்டனுடன் இணைந்து நடித்ததால் ஓரளவுக்கு சூர்யாவை இனங்காட்டியது .(விஜயின் தந்தை S.Aசந்திரசேகர் எடுத்த படம் இந்த பட வாய்ப்புக்கும் விஜய்தான் காரணம்)
. மீண்டும் சித்திக் இயக்கத்தில் விஜயுடன் இணைந்தார் பிரண்ட்ஸ் படத்தில்.படத்தில் விஜய்,சூர்யா இருவரும் உயிர் நண்பர்கள். அவர்களின் நட்பை சுற்றியே திரைக்கதை நகரும் .வடிவேலுவின் நகைச்சுவையும் கை கொடுக்க படம் சூப்பர் ஹிட் ஆனது .பிரண்ட்ஸ் வரும் போதும் விஜய் குஷி,பிரியமானவளே என தொடர் வெற்றியில் இருந்தார் .காதலுக்கு மரியாதை ,துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பிளாக் பஸ்ட்டர் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் இருந்தார்.ஆனால் சூர்யா சினிமாவில் இனம் காணப் படாமல் தோல்வியில் துவண்டு இருந்தார்.எனினும் மீண்டும் தனக்கு சமனான வேடத்தை அளித்து அவருக்கும் பாடல் காட்சிகளை வழங்கினார் விஜய். சூர்யா,விஜய் சேர்ந்து வரும் பாடல் காட்சிகளை பார்த்தால் தெரியும் .ஒரு காட்சியில் விஜய் முன்னிலைப் படுத்தப் பட்டால் அடுத்த காட்சியிலேயே சூர்யா முன்னிலை படுத்தப்படுவார் .அப்போதைய காலகட்டத்தில் விஜய் அப்பிடி நடித்திருக்க தேவை இல்லை.சூர்யாவை இரண்டாவது ஹீரோ ஆக காட்டி இருக்கலாம் .ஆனால் விஜய் அப்பிடி செய்ய வில்லை .ஏன் ?.சூர்யா அவரின் நண்பன்.ஆக மொத்தத்தில் விஜய் சூர்யாவை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல் முதல் வெற்றியையும் பெற்று கொடுத்தார் .பிரண்ட்ஸ் இல் முதல் வெற்றியை பெற்ற சூர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .


இனி தனக்கு ஏறுமுகம் தான் என்று .அடுத்து சூர்யா நடித்த நந்தா சூர்யாவின் கரியரையே புரட்டி போட்டது .சூர்யாவை பாலா பட்டை தீட்டினார் .சூர்யா நடிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டார் .படங்களை தேர்ந்தெடுத்தார் .படத்திற்காக கடுமையாக உழைத்தார் .வெற்றிகளை குவிக்கிறார் .அதிர்ஷ்டமும் சூர்யாவுக்கு கை கொடுத்தது.நந்தா முதலில் அஜித் நடிப்பதாய் தான் இருந்தது .கஜினியும் மிரட்டல் எனும் பெயரில் அஜீத்துக்காக உருவான படம்தான் .

எது எப்படியோ சூர்யா இன்று முன்னணி இடத்துக்கு வந்து விட்டார் .இன்றைய தேதியில் முன்னணி நடிகர் அவர்தான் .அவரின் அடுத்த படமான ஏழாம் அறிவுக்கு நிலவும் எதிர் பார்ப்பு ,அவரின் சமீப படங்களின் தொடர் வெற்றிகள் என்பன அதற்கு சான்று .ஆனால் இப்போதைய விஷயம் என்னவென்றால் விஜய்,அஜித்,விக்ரமும் சூர்யாவின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டனர் .படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டனர்.நண்பன் வந்த பின் மீண்டும் முன்னணி யார் என்று எழுத வேண்டி வரலாம் .அதை விடுவோம் நான் சொல்ல வேண்டிய விடயம் இந்த நண்பன்தான்.


. . 3 இடியட்ஸ்ஐ தமிழில் ஷங்கர் ரீமேக் செய்வார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அனைவரிடமும் எழுந்த ஒரே கேள்வி அமீர்கான் பாத்திரத்தில் ஷங்கர் யாரை தெரிவு செய்வார் என்பதுதான் .ஷங்கர் தீர்க்கமாக விஜயை தெரிவு செய்தார் .விஜயின் நண்பர்களில் ஒருவராக சூர்யா நடித்திருக்கலாம் அது நட்பை சூர்யா வெளிக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் .அதை இங்கு சொல்ல வரவில்லை .அப்போது சூர்யா வெற்றிக் கடலில் மிதந்து கொண்டிருந்தார் .விஜய் தோல்வியில் துவண்டு கொண்டிருந்தார்.விஜயை விட முன்னணியில் இருக்கும் போது அவரையும் விட முக்கியத்துவம் குறைந்த ரோலில் நடிப்பது சாத்தியம் இல்லைதானே . .ஆனால் அரசியல் காரணங்களுகாக விஜயை படத்தை விட்டு தூக்கியவுடன் அந்த இடத்துக்கு சூர்யாவை நடிக்க கேட்ட போது சூர்யா என்ன செய்தார்.இது தன்னுடைய நண்பனின் படம் அவனை நீக்கிய படத்தில் நான் நடிப்பது அவனை அவ மதிப்பது போன்றது என்பது சூர்யாவுக்கு தெரியாதா? எப்படி ஒத்துக் கொள்ள முடிந்தது இவரால் .பட வாய்ப்பு இன்றி தோல்வியில் துவண்டிருந்தாலும் பரவாயில்லை மன்னித்து விடலாம் .இந்த படத்தில் நடித்துதான் தான் சூர்யா என்பதை நிருபிக்க வேண்டுமா?.அதற்குள் படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை வேறு.


. முடிவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.நான் சூர்யாவை குறை கூற வரவில்லை.சூர்யா,விஜய் நட்பு பற்றி நான் நினைப்பதைத்தான் எழுதி உள்ளேன் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் . இது நண்பன் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வந்திருக்க வேண்டிய பதிவு .

No comments:

Post a Comment