மும்பையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பினிக்ஸ் மில்ஸ் மாலில் (Phoenix Mills Mall), தானியங்கி இயந்திரம் மூலம் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடன் அட்டையை பயன்படுத்தி நமக்கு தேவையான தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கி கொள்ளலாம்.

மும்பை நகரின் குர்லா பகுதியில் அமைந்து இருக்கும் இந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், விரைவான சேவையை வழ்ங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு சுமார் 900 டன் பில்லியன் அளவிற்கு தங்க நகைகள் இந்தியர்களிடையே புழங்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக, உலகிலேயே ஆக அதிகமாக, இந்தியர்கள் அதிக நகைகளை ஆபரணங்களாகவும், எதிர்கால சொத்தாகவும் கருதி முதலீடு செய்து வருகின்றனர். மத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பான மூலதனமாக தங்கம் கருதப்படுகிறது. தற்போது நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் தங்கம் மட்டுமே தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருகிறது. இதனால் இதன் முதலீட்டு தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முதலீட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment