கடையொன்றில் நகைகளை திருடி பாவாடைக்குள் உள்ள இரகசிய பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்த பெண்ணொருவர் வசமாக மாட்டிக் கொண்டார்.

திருடிய தங்க நகைகளின் பெறுமதி 54000 ஸ்டேர்லிங் பவுண்கள். இவர் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்தே திருடி பாவடையில் இருந்த நீண்ட பொக்கெட்டுக்களில் மறைத்து வைத்துள்ளார். கண்காணிப்புக் கமரா காட்டிக் கொடுத்தமையால் Saina Sava என்ற குறித்த பெண் வசமாக மாட்டிக் கொண்டார்.



குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவராவார். திருடுவதிலும் திருடர்கள் நாளாந்தம் புது புது தொழிநுட்பங்களைக் கையாளுகிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எல்லோருமே….
|
No comments:
Post a Comment