Saturday, May 14, 2011

பென் டிரைவை கச்சிதமாக கையாளும் முறை

பென் டிரைவை கணினில் செருகி திறக்கும் போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்து எதாவது வைரஸ் தொற்றியுள்ளதா என பார்த்து பின் பென் டிரைவை திறக்கவும் .
மேலும் உங்கள் கணினியில் இலவச ஆண்டி வைரஸை நிறுவி இருந்தால் அது எல்லா வைரஸ்களையும் பிடித்து அழித்திருக்கும் என நம்பமுடியாது எனவே மை கம்ப்யூட்டர் சென்று அதில் உள்ள அட்ரஸ் பாரில் உங்கள் பென் டிரைவ் உள்ள கோலன் என்ன என்பதை அறிந்து கொண்டு அதை டைப் செய்து என்டர் தட்டி திறக்கவும்.

உதாரணமாக — J:/ என்று டைப் செய்து திறக்கவும் .

இதனால் நீங்கள் நிறுவியுள்ள ஆண்டி வைரஸ் பிடித்து அழிக்காத வைரஸ் உங்கள் பென் டிரைவில் இருந்தாலும் அது உங்கள் கணினியில் புகுவதற்கு வாய்ப்பில்லை . இனிமேல் இவ்வாறு செய்து உங்கள் கணினியில் வைரஸ் புகாதவாறு பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment