Saturday, May 14, 2011

வந்துவிட்டது 1TB PENDRIVE

பென் டிரைவ் தயாரிப்பில் பிரபலமான கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 150 என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 10024 ஜிபி. அதாவது 1 TB


மற்ற டிரைவ்களைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளத்தில், 77.5 மிமீ, இது அமைக்கப்பட்டுள்ளது. அகலம் 22 மிமீ மற்றும் தடிமன் 12.05 மிமீ. இதனுடைய எடை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் வெளிப்புற ஷெல் சிகப்பாக பாலிஷ் செய்யப்பட்டது போல் உள்ளது. இது இயக்கப்படுகையில் நீல நிறத்தில் உள்ளாக லைட் எரிகிறது.

பைல்களை நொடிக்கு 28.3 எம்பி வேகத்தில் படிக்கிறது. எழுதுகையில் நொடிக்கு 7.8 எம்பி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் சராசரியாக நாம் பிற பிளாஷ் டிரைவ்களில் பார்க்கும் வேகம் தான்.

ஐந்தாண்டு வாரண்டியுடன் கிடைக்கும் இந்த டிரைவ் குறியீட்டு விலை ரூ. 10,700.

அதே போல்
45 நாட்களுக்குத் தொடர்ச்சியாக,நான்ஸ்டாப் பாகப் பாடக்கூடிய வகையில் 76 ஆயிரம் பாடல்கள் அல்லது “டிவிடி” குவாலிட்டியில் 170 சினிமாப் படங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் பதிவு செய்யும் வகையிலான 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட புதிய பென் டிரைவினை,சான்டிஸ்க் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment