Saturday, April 9, 2011

ஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்


ஆந்தைகளில் மிகவும் அதிகமாக காணப்படும் வகை பார்ன் ஆந்தைகள். (Barn Owls) இவை அனைத்துக் கண்டங்களிலும் (அண்டார்டிக்காவைத் தவிர) பரவலாகக் காணப்படுகின்றன. இதைத் தவிர உலகின் ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்துக்குரிய ஆந்தைகள் காணப்படும்.
ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உண்டு. இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை Barn Owl, Burrowing Owl, Eagle Owl, Elf Owl, Little Owl மற்றும்Pygmies Owl.
ஆந்தையின் கண்கள் மற்ற பறவை களைப்போல் பக்கவாட்டில் அமைந் திருக்காது. மனிதர்களுக்கு இருப்பது போல் நேர் திசையைப் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
இவற்றின் உடலைச் சுற்றியிருக்கும் இறக்கைகள் மென்மையானவை. அதனால்தான் இவை பறக்கும்போது சத்தம் வருவதில்லை.
ஆந்தைகளில் இருக்கும் வெவ்வேறு இனங்கள் 6 இன்ச்சிலிருந்து 28 இன்ச் வரை இருக்கும்.
ஆந்தைகளின் ஃபேவரிட் உணவு \ எலி போன்ற சிறிய விலங்குகள், சிறிய பறவைகள், பல்லிகள், பூச்சிகள், மீன்கள் மற்றும் தவளைகள்.
இவற்றின் எடை 3 பவுண்டு முதல் 9 பவுண்டு வரை இருக்கும். பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளைவிடப் பெரியதாக இருக்கும்.
இவை வாழும் இடங்கள்: காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்கள்.
ஆந்தைக் குஞ்சுகள் 15-லிருந்து 35 நாட்களுக்குள் முட்டைகளிலிருந்து வெளியே வரும்.
முதலில் பிறக்கும் குஞ்சுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய நன்மை இவற்றுக்கு உணவில் அதிகப்பங்கு கிடைக்கும் என்பதுதான். அதனால் உணவு குறைவாக இருந்தால் முதலில் பிறந்த குஞ்சுகள் மட்டுமே உயிர் வாழும். உணவு அதிகம் இருந்தால் அனைத்துக் குஞ்சுகளும் உயிர் வாழும்.

குஞ்சு பொரிக்கத் தயாராகும் ஆந்தைகள் ஒழுங்கான முறையில் கூடுகள் கட்டாது. பாறைகளின் விளிம்பிலோ, மரங்களில் வெறும் உதிர்ந்த இலைகள், இறக்கைகளின் மேலேயே முட்டையிடும்.
ஆந்தைகள் இரவில் மட்டுமே வேட்டைக்கு செல்லும். அதனால் இவற்றுக்கு காதுகள்தான் முதல் கண்கள்.
இரவானதும் ஆந்தைகள் தாழ்வாகப் பறந்து செல்லும். அப்போது எலி போன்ற சின்ன சின்ன மிருகங்கள் எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அந்த திசையில் பறந்து சென்று அவற்றை இரையாக்கிக்கொள்ளும்.
ஒரு சிறிய சத்தம் கேட்டதும் ஆந்தை தன் தலையை இரு புறங்களிலும் மாற்றி மாற்றித் திருப்பி சத்தம் வரும் திசையைக் கண்டறிய ஆரம்பிக்கும்.
இரண்டு காதுகளிலும் ஒரே அளவு சத்தம் கேட்டால் ஆந்தை இரைக்கு சரியாக நேர்கோட்டில் இருக்கிறதென்று அர்த்தம். உடனே பறந்து சென்று இரையைத் துல்லியமாக பிடித்துவிடும்.
மற்ற பறவைகளைப்போல் கால்களில் பிடிக்காமல் ஆந்தை தன் அலகில்தான் இரையை கொண்டுசெல்லும்.
பெரிய இரைகளைக் கிழித்து சிறிது சிறிதாக்கி உண்ணும் வழக்கம் உள்ளவை ஆந்தைகள். அதுவே சிறிய இரையாக இருந்தால் அப்படியே முழுசாக விழுங்கிவிடும்.

No comments:

Post a Comment