
இவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள், ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். net neutrality இப்படித்தான் போகும்.
கார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 1,0 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.
மறந்து போகும் முன்னால் http://desimusicapp.com பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன், ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள், லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம்.
|
No comments:
Post a Comment