ஒரு காலத்தில் தனி நபரின் நடவடிக்கைகளை அறிவதற்கு ஒற்றர்கள் அமைத்து நிழல்போல் பின் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று தகவல் தொடர்பு மற்றும் மற்ற தொழில் துறையில் ஏற்பட்ட அபார வளர்ச்சி நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள். நாம் யாராலேயோ அல்லது எதனாலேயோ கண்காணிக்கப்படுகிறோம். பாதுகாப்பு மற்றும் திருட்டு தடுப்பு என்ற பெயரில் அங்கங்கு அமைக்கப்பட்ட சோதனை மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் நம் தனிமைகளை விலை பேச வந்துவிட்டன.
தொழில் நுட்பம் வளர வளர சாதனங்களின் விலையும் குறைய ஆரம்பித்து சாதாரண மக்கள் உபயோகிக்கும் அளவிற்கு வந்துவிட்டன. எடுத்துக்காட்டாக செல்போன்.
இன்று ஒருவர் எங்கிருக்கிறார் என்பதை நொடிப்பொழுதில் அறிய முடியும். தகவல் தொடர்பு தொலைவுகளை குறைத்தாலும் தொல்லைகளை அதிகரித்திருக்கின்றன என்பது நிதர்சன உண்மை. எங்கு சென்றாலும் செல்போன் ஒலிகள். சில சமயம் நாம் எப்பொழுது இந்தத் தொல்லையில் இருந்து விடுபடுவோம் என்ற ஏக்கமும் ஏற்படுவதுண்டு.
ஒரு அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களின் விபரங்கள், மணமக்களை தேர்ந்தெடுப்பதற்காக மணமகனோ அல்லது மணமகளின் விபரங்கள் தன் மகள் அல்லது மகன் ஆகியோரின் நடவடிக்கைகளை பற்றிய விபரங்கள் இவை அனைத்தையும் சேகரிக்க நம் நாட்டில் பல தனியார் உளவுத்துறை அலுவலகங்கள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கிவிட்டன.
இதைத்தவிர அரசாங்க உளவுத்துறை, சி.பி.ஐ., போக்குவரத்து கண்காணிப்பு போன்ற அரசாங்க நிறுவனங்களும் உண்டு. இதில் நாம் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் கண்காணிக்கப்படுகிறோம். இவையெல்லாம் நம் நாட்டில் கடந்த சில வருடங்களாகத்தான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து அணு ஆராய்ச்சி மையம் வரை பல கோடி பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு முறைகளில் கண்காணிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு மற்றும் தகவல் சேகரிப்பு என்ற பெயரில் ஒருவரின் தனிமையை மற்றவர் பார்க்கும் அளவிற்கு நாகரீகம் வளர்ந்துவிட்டன. இதற்கு சென்ஸார்கள் எனப்படும் நுண்சாதனம் எங்கெல்லாம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இவற்றிற்கு அமெரிக்க மக்கள் மற்றும் தனிமை விரும்பிகள் (பாதுகாவலர்கள்) மத்தியில் எவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்று வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் சுமார் நான்கில் ஒரு பங்கு வாடகைக் கார் கம்பெனிகள் இவ்வகை சாதனத்தை தங்களது கார்களில் பொருத்தியுள்ளது. மற்றும் சில கம்பெனிகள் தவறு செய்யும் ஓட்டுனர்களை கண்டுபிடிப்பதற்காகவே இச்சாதனத்தை பொருத்தியுள்ளது. கார் திருடப்பட்டாலோ அல்லது பாலைவனப் பகுதியில் பழுதடைந்தாலோ அல்லது பனிப்புயலில் கார் மாட்டிக் கொண்டாலோ ஜி.பி.எஸ். சாதனம் மூலம் கார் எங்குள்ளது என்பதை அறிந்து அதற்குண்டான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வசதியாக உள்ளது என்று கார் நிறுவனங்கள் கூறினாலும் ஏதோ குற்றவாளிகளை பின் தொடர்வது போல் எங்களைத் தொடர்வது நல்லதல்ல என்கிறார்கள் ஓட்டுனர்கள்.
ஒரு புது தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அதை அதன் எல்லைக்குட்பட்ட முறையில் உபயோகிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம் என்கிறார் வாஷிங்டனில் உள்ள மின்னணு தனிமை மற்றும் தகவல் மையத்தைச் சேர்ந்த டேவிட் க.சோபல்.
கடந்த பல வருடங்களாக புதிய வழித்தடமறிதல் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் தரவு அமைப்புடன் இணைந்து கண்காணிப்பு முறையில் நமது தகவல்களைக் கொண்டு புதிய படைப்புகளையும் அதே நேரம் தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைக்கவும் செய்திருக்கின்றது. இந்த தொழில் நுட்ப யுக்திகள் நமது வாழ்க்கை முறையை மிகவும் எளிதாக்குகிறது. அதாவது இதன் மூலம் நீங்கள் வாகனத்தில் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் பொழுது காரை நிறுத்தாமலேயே கட்டணம் செலுத்தலாம். (சுங்கச்சாவடியில் உள்ள ”சென்ஸார்”" உங்களது காரின் எண்ணை அறிந்து உங்களது கிரெடிட் கார்டின் கணக்கில் ஏற்றி விடும்). ”விரல் ரேகை அறியும் முறை மைகள்” நீங்கள் யார்? உங்களது பின்னணி என்ன? போன்ற விபரங்களை தெரிவிக்கும். முதலில் இதுபோன்ற முறைகளில் உங்களது கிரெடிட் கார்டில் வேறொருவர் செலுத்த வேண்டிய தொகையை ஏற்றிவிடுவது போன்ற தவறுகளும் நடந்தேறியது. ஆனால் தரவுகள் கொண்டிணைக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்களின் இத்தவறுகளை அகற்றி ஒவ்வொரு நாளும் மிகவும் திறன்பட்டதாக விளங்கி வந்தாலும், இதன் மூலம் நடக்கும் தொல்லைகள் ஏராளம் என்கிறார்கள்.

சோபல் மற்றும் பல தனிமை வல்லுனர்கள் அதே சமயம் இந்த தொழில்நுட்பத்தைச் சீரமைக்கும் சட்ட திட்டங்களோ மிகவும் பின்தங்கியுள்ளன. சுற்றுலாப் பயணி பியூங்-சூ-சன்னுக்கு நேர்ந்த சம்பவம் அனாவசியமாகப்பட்டாலும் இது ஒரு சட்டத்தின் முன்னால் இது ஒரு சரியான நடவடிக்கையே. நீங்கள் அறியாமலே உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் கம்பியில்லா பாதுகாப்பு அட்டை நீங்கள் அலுவலகத்திற்கு வந்து செல்லும் நேரத்தை பதிவு செய்கிறது. உங்களது மின் அஞ்சல், தொலைபேசி அமைப்புகள் மற்றும் உங்களது பலவித செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். வலைதளத்தை நீங்கள் அலசும் பொழுது எந்த தளத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் அலுவலகமோ அல்லது அரசாங்கமோ கண்காணிக்க முடியும். அமெரிக்கா மற்றும் இங்கி லாந்து போன்ற நாடுகளில் அங்குள்ள மக்களின் செல்போன் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்காணிக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஆக்ஸிகாம் கார்பொரேஷன், லிட்டில் ராக் மற்றும் சாய்ஸ் போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் உள்நாட்டு சாதாரண குடிமக்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களின் தகவல்களின் தரவுகளை (னுயவய) ஒன்றிணைந்து தரவு பணிமனையில் பதிவு செய்து அதை கோடிக்கணக்கான மற்ற பதிவுகளையும் ஒத்துப்பார்த்து வகை பிரித்து வைத்துள்ளார்கள். இந்தத் தகவல்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனம், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு காரியங்களுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. செப்டம்பர்-11 சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க பாதுகாப்புத் துறையும் இத்தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
20 டாலர் கொடுத்தால் போதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் காண முடியும். சாய்ஸ் பாய்ஸ்ட்டில் நிறுவனம் உங்களிடம் உள்ள தொலைபேசி எண்கள் நீங்கள் வைத்துள்ள இடத்தின் தற்போதைய மதிப்பு, கார் லோன் மற்றும் உங்கள் வழக்குகளின் விபரங்கள், நீங்கள் வைத்துள்ள ரேடியோ, மருந்து விபரங்கள், துப்பாக்கி உரிமங்கள், உங்களின் குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் போன்ற பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் சட்ட அமலாக்கம் என்ற பெயரில், பாதுகாப்பு, செலவினக் கட்டுப்பாடு, மற்றும் வசதிக்காக, வணிகம் சார்ந்த மற்றும் அரசு நிறுவனங்கள் இத்தொழில் நுட்பத்தை மென்மேலும் ஆராய்ந்து பலவித தகவல்களை சேகரித்து தகவல் களஞ்சியமே வைத்துள்ளது. இவற்றை நவீன வலையமைப் பாக்கம், கம்பியில்லா தொடர்பு தரவு களஞ்சியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்து எவற்றையெல்லாம் நாம் நமது தனிப்பட்ட சொந்த விபரங்கள் என நினைத்துக் கொண்டிருந்தோமோ அவையெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு வந்துவிட்டன. இவ்வித தனிப்பட்ட சொந்த விபரங்கள் கொண்ட தரவுகளை சமாளிக்க சில ஆய்வாளர்கள் மறைமுகமாக எதிர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். புதிய தரவுத்தள வடிகட்டிகள் (Database Filters) கொண்டு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதனால் முக்கிய மான ஆவணங்கள் பற்றிய தகவல் சேகரிக்கும் ஒருவர் தனிப்பட்ட நபரின் சொந்த விபரங்களை அணுகுவது தடுக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமரா வடிகட்டிகள் நீங்கள் சரியாக எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை கண்காணிப்புக் கேமராக்கள் உணர முடியாமல் போக வழிவகை செய்கிறது.
இந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் மக்களின் தனிமைக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிக்கை ஒன்று தயாரானது. இவ்வறிக்கை அரசாங்க தரவு களஞ்சிய செயல்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் தரவு களஞ்சிய கருவிகள் மூலம் எந்த ஒரு குற்றம் பிரியாமல் இருக்கும் ஒரு அமெரிக்க குடிமகனின் சொந்த விபரங்களை சோதனை மேற்கொள்வது சரியான நடவடிக்கை அல்ல என்றும், (டீடைட ழக சுiபாவள) சட்டவரைவு உரிமை தயாரித்த அதிகாரிகள் இதை எதிர்த்தும் மேலும் இந்த மாதிரியான தனிநபரின் சொந்த விபரங்கள் பொதுத் தேடலுக்கு உட்பட்டுவிடும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அறிக்கையில் சட்டம் மற்றும் தொழில்நுட்ப காப்பு இல்லாமை மற்றும் நடப்பு கண்காணிப்பு முறைகள் சாதாரண குடிமக்களின் சுதந்திரத்தை பெருமளவு பாதிப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் மத உணர்வு, அரசியல் மற்றும் பொதுமக்களின் உரிமைக்கும் பங்கம் விளைவிப்பதாக தெரிவித்திருந்தது.
—-
—-
காதலியை உளவு பார்த்து மாட்டிக்கொண்டவர்
ஜி.பி.எஸ்.தொழில் நுட்பம் மூலம் ஒருவரை எந்த அளவுக்கு துப்பறியலாம் என்பதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது……
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஜெலன்டேல் என்ற இடத்தைச்சேர்ந்தவர் ஏராகேபிரியேல்யான். 32 வயதான இவர் ஒரு பெண்ணை காதலித்தார். கொஞ்சகாலத்தில் காதல் முறிந்து விட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் காதலியை மறக்கமுடியாமல் கேபிரியேல்யான் தவித்தார். அதோடு காதலி வேறு யாரையாவது காதலிக்கிறாரா? என்பதையும் கண்காணிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்.
இதன்படி காதலியின் காரில் ஒரு செல்போனை பொருத்தினார். கார் ஒடத்தொடங்கியதும் செல்போன் இயங்கும் வகையில் அதற்கு பேட்டரி இணைப்பு கொடுத்தார். காதலியின் கார் எங்கெல்லாம் செல்கிறதோ அந்த இடம் பற்றிய தகவல்கள் செல்போன் மூலம் செயற்கைகோள் வழியாக தனது கம்ப்ய10ட்டருக்கு வரும் வகையில் கேபிரியேல்யான் ஏற்பாடு செய்திருந்தார்.
(செல்போன் வைத்திருப்பவர்கள் தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவசதியாக அந்த இடத்தின் பெயர் செல்போன் திரையில் தெரியும். இத்தகைய ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தைத்தான் கேபிரியேல்யான் பயன்படுத்தி தனது காதலியை உளவு பார்த்தார்)

|
No comments:
Post a Comment