Thursday, January 6, 2011

பிரம்மமுனி சொன்ன சித்த மருத்துவத்தின் ரகசியம்!



          பிரம்ம முனி என்னும் சித்தர் பல சித்த மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். அதில் பிரம்மமுனி வைத்திய சூத்திரம்-390 என்னும் நூல் மிக முக்கியமானது. சித்த மருத்துவத்தின் சிறப்பான மருந்துகளான அமுரி, முப்பு, பூநீறு போன்றவற்றை பற்றிய குறிப்புகள் இந்நூலில் ஏராளமாக அடங்கியுள்ளன. அது மட்டுமின்றி, சிறப்பு மருந்துகளான கட்டு, கற்பம், குளிகை, களங்கு, உருக்கு போன்றவற்றை பற்றியும், அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் பிரம்மமுனி விளக்கியுள்ளார்.




         அவர் எதிர்காலத்தையும் தன் மெய்ஞான அறிவால் புரிந்திருந்தார். ஆகையால்தான் தனது நூலில் சித்த மருத்துவ வாத, வைத்திய மருந்து செய்முறைகளை பல நூல்களை பார்த்து தெரிந்துகொள்வதுடன், குருவின் துணையுடன், செய்முறைகளை பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் நூல்களில் கூறப்பட்டவற்றை தவறு என்று சொல்பவர்கள் அசுத்தத்தை தங்கள் மேல் பூசிக் கொள்வதற்கு சமமாவார்கள். 


ஏனெனில் பண்டைய மருத்துவ நூல்கள் அனைத்தும் குருவுக்கு தொண்டு புரிந்து, வேதாந்த நூல்களை ஆய்ந்தறிந்து, கைமுறை, செய்முறை மற்றும் பாரம்பரிய முறைகளின்படியாக இறைவனை வணங்கி செய்யப்பட்டவை. இவற்றில் மறைக்கப்பட்ட சில குறிப்புகளை உணராமல், பஸ்பம், செந்தூரம், சுண்ணம் போன்ற மருந்துகளை பற்றிய கருத்துகளையும், ஆய்வுகளையும் வெளியிடுபவர்கள் சித்த மருத்துவத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் அல்ல. ஆகையால்தான் பெரும்பாலான மூலிகை உலோக மருந்துகள் பற்றிய பிற கருத்துகள் அனுபவ பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

No comments:

Post a Comment