Thursday, January 6, 2011

ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும்

           பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும்படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந்தளவில் பக்குவப்படுத்தி சாப்பிடும்போது அது மருந்தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும்போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத்தன்மையும் நிரம்பியுள்ளது. 


             ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக்கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும்போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இதுவே மருந்தின் இலக்கணம். ஆனால், நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள் இவ்வாறு இருப்பதில்லை. கிடைப்பதற்கு அரிதான அல்லது விலை மதிப்புள்ள உணவுகளில் பல்வேறுவகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை அன்றாடம் சாப்பிட முடியாவிட்டாலும், அவ்வப்போதாவது சாப்பிட்டுவந்தால் பல்வேறு வகையான மருத்துவ பலன்களை பெறலாம். பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுடன் பெருமளவு மக்களால் விரும்பி உட்கொள்ளப்படும் அற்புத பழம்தான் நோனி. நோனி பழச்சாறாகவும், நோனி பொடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பழங்களில் கரிநீரகங்களும், நார்ச்சத்தும் ஏராளமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும், பிளேவனாய்டுகள், ஸ்கோபோலெட்டின், டம்னகாந்தல், இரிடாய்டுகள் போன்ற தாவர வேதிச்சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது. இவை மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை கட்டுப்படுத்துவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோனி பழச்சாற்றை உட்கொண்டுவர, மாதவிலக்கு கோளாறுகள், வயிற்று உபாதைகள், நாட்பட்ட சளியில் தோன்றும் தொண்டை அழற்சி ஆகியவை நீங்கும். பழச்சாறு மட்டுமின்றி, நோனிப்பட்டையிலுள்ள அலிசாரின் மற்றும் கிளைக்கோசைடுகள் மூட்டுவாதத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் தூக்கமின்மையை நீக்கி, புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதன் பட்டையிலுள்ள ரூபிக்குளோரிக் அமிலம் குடற்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளின் தேவையற்ற வளர்ச்சியை நீக்குகின்றன.





                         கை விரல்களிலுள்ள நகங்களை கடித்து சாப்பிடுகிறான். அவன் உடல் மெலிந்து காணப்படுகிறான். இதற்கு என்ன செய்வது?

                வயிற்றில் கிருமிகள் இருப்பதாலும், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் சத்து குறைபாட்டாலும், ரத்தசோகையினாலும் இவ்வாறு தோன்றலாம். பால், பழச்சாறு, அரிசி கழுவிய நீர், இளநீர் ஆகியவற்றை அடிக்கடி வழங்குவது நல்லது. அசுவகந்தி லேகியம் -5 கிராம் இரண்டு வேளை தினமும் சாப்பிட்டுவர உடல் தேறும்.



              

No comments:

Post a Comment