Wednesday, January 12, 2011

வலுச்சண்டைக்கு போவர் வட்ட முகம் உள்ளவர்

 “ எதற்கெடுத்தாலும் சுருக்…கென கோபம் வரும்.  வட்டமுகம் உள்ளவர்களுக்கு; வலுச்சண்டைக்கு போவர்!’ - பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட வித்தியாசமான ஆய்வில் இப்படி ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ரூக் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர் செரில் மெக்கர்னிக் தலைமையில் நடந்த, இந்த ஆய்வில் தெரியவந்த உண்மைகளை “டெய்லி டெலிகிராப்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்களில் யாருக்கு அதிக கோபம் வரும் என்பது பற்றி ஒரு ஆய்வை நிபுணர்கள் மேற்கொண்டனர். பல துறையை சேர்ந்தவர்களை உதாரணமாக கொண்டும், இன்டர்நெட்டில் ஆன்-லைன் சர்வே நடத்தியும் ஆய்வு மேற்கொண்டதில் சில உயிரியல் உண்மைகள் தெரியவந்துள்ளன. ஆண்களில் வட்ட முகம் எந்த அளவுக்கு உள்ளதோ, அப்படிப் பட்ட ஆண்களுக்கு தான் “சுர்ர்ர்…’ ரென கோபம் வருகிறது. அவர்கள் தான், எந்த ஒரு விஷயத்திற்கும் வலுச்சண்டைக்கு போகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பிரபலமான விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல துறையினரின் பழக்கவழக்கத்தை இதற்கு சான்றாக ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர் நிபுணர்கள்.
குறிப்பாக, 90 கால்பந்து விளையாட்டு வீரர்களின் மனப்போக்கை ஆய்வுக்கு முழுமையாக பயன் படுத்திக்கொள்ளப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர், கோல் போடுவதில், எதிர் அணி வீரர்களுடன் மல்லுகட்டுவதில் சம்பந்தப்பட்டுள்ளனர். மிகவும் கோபக்காரர் என்று பெயர் பெற்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோருக்கு வட்டமுகம் என்ற விஷயம் நிபுணர்களை அசர வைத்துள்ளது. இவர்களை சான்றாக வைத்து, மற்ற துறையினரையும் தேர்வு செய்து, அவர்களின் மனப்போக்கை ஆய்வு செய்தனர்.
ஆண்களில் வட்ட முகம் உள்ளவர்களுக்கு, கோபம் அதிகம் வரும் என்ற உறுதியான முடிவுக்கு நிபுணர்கள் வந்துள்ளனர். மனிதனின் போக்குக்கும்,அவனது முகத்தோற் றத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஒவ்வொரு போக்கிலும், அவன் முகம் தான் முதலில் காட்டிக் கொடுக்கிறது. அந்த வகையில், அவன் முகத்தோற்றமும் அவன் சுபாவத்தை முடிவு செய்கிறது. வட்ட முகம் இல்லாமல், நீள முகம் கொண்ட பலர் சாந்த சொரூபராக உள்ளதும் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது
.
ஆண்களை பொறுத்தவரை தான் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், பெண்களின் சுபாவத்தை கண்டறிய அவர்களின் முக வடிவம் பயன்படவில்லை. பெண்களில் முகத்தை வைத்து அவர்கள் சாந்தமானவரா, கோபக்காரரா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. வட்ட, நீள முகம் கொண் டவர்களில் சரிசமமாக கோபக்காரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment