Monday, December 19, 2011

ஆபத்தைத்தரும் அஜினாமோட்டோ!

சமையலில் ருசிக்காக இன்றைக்கு "அஜினாமோட்டோ" என்ற வேதி உப்பு பயன்படுத்தப்படுகின்றது.

உணவுப் பொருள்களுக்கு சுவை சேர்ப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது.

இந்த அஜினாமோட்டோ உப்புகள் ஹோட்டல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மலேசியா போன்ற நாடுகளில் இது ஒரு மளிகைப் பொருளாகவே மாறிவிட்டது.

நமது நாட்டிலும் பாஸ்ட்புட் கடைகளில் இந்த அஜினாமோட்டோ மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த அஜினாமோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை ஊரல்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
இதை உணவுப் பொருள்களில் சேர்த்துக் கொள்வதால் உடல்நலத்திற்கு கேடு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டோ சேர்த்தால் தலைவலி,நெஞ்சுவலி,குமட்டல்,கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகளை இது ஏற்படுத்துகின்றது.

அது மட்டுமில்லாமல் இந்த உப்பு நம் உடலில் உள்ள கால்சியம் சத்துகளை உறிஞ்சி எலும்புகளை பலமிழக்க செய்வதாகவும்,அதன் மூலம் முடிகள் நரைத்துப் கேடுவிளைவிக்கும் இந்த அஜினாமோட்டோவை உணவில் சேர்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

No comments:

Post a Comment