Wednesday, November 9, 2011

அங்கே பஞ்சு தான் உணவு

சோமாலியாவில் 6,40,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்... இவர்களுக்கு நாம் நம்மாலான உதவிகளை உடனே செய்தாக வேண்டும் சகோ..!

நண்பர்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலை தளங்களில் பகிர வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: 


சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?

ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.
சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (Fஆஈள் ஸ்TஆTஏ) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.

உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..

உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.


http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hK9hiMpCZp6GAiO8HBQAxT_O1Jmw?docId=93b79e4575dd43b2a71486e26d474a20

http://www.wtsp.com/news/national/article/204731/81/29000-children-dead-from-famine-in-Somalia

http://www.unfoundation.org/

http://www.unicefusa.org/

http://www.salem-news.com/articles/august092011/help-somalia-cf.php

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=734

உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்

Somali refugees need your help now!
End Famine in Somalia - Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency - Food and shelter urgently needed!

United Nation High commission for Refugees (UNHCR)

http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA

International Committee of the Red Cross (ICRC)

http://www.icrc.org/eng/donations/index.ஜ்ச்ப்

http://www.globalgiving.co.uk/pr/8500/proj8493a.html?rf=ggadgguk_goog_even_somalia_4&gclid=CO3xu8zKr6sCFQUb6wodO2hueQ

Somalia's Children Caught in the Crossfire

https://takeaction.amnestyusa.org/site/c.6oJCLQPAJiJUG/b.6662481/k.2BA2/Donate_Now/apps/ka/sd/donorcustom.asp?msource=W1108EDCRYJ&tr=y&auid=8824967

முத்தமிழ்
சென்னை

நண்பர்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலை தளங்களில் பகிர வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி - Google குழுமம்.Collapse this post

No comments:

Post a Comment