Thursday, July 7, 2011

வேங்கை - சினிமா விமர்சனம்

ஊரில் மிகபெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் MLA பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. 
 
 
தன்மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார். திருச்சியில் பஸ்ஸில் தமன்னாவை பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ‌ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இறுவருக்கும் காதல் மலர்கிறது.

ராஜ்கிரண் தயவில் MLA வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிக சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தமன்னா படிக்கும் கல்லூரியில் ஆரம்பிக்கும் ரவுடிச்சண்டையில் தனுஷ் தலையிடும் தனுஷ் ரவுடிகளை துவம்சம் செய்கிறார். அதன்பிறகு ஒதுங்கிப்போக நினைத்தாலும் ரவுடிகள் விடாமல் தனுஷை குறிவைக்கிறார்கள்.
இதற்க்கிடையில் MLA பிரகாஷ்ராஜை ராஜ்கிரண் அடித்துவிட இருவருக்குமான பகை முற்றுகிறது. உடனடியாக பதவியை‌ ராஜினாமா செய்ய சொல்லும் ராஜ்கிரணை காலி செய்ய முடிவெடுக்கிறார் பிரகாஷ்ராஜ். வெளியூர் ஆட்களை கொண்டு தனுஷை கொலை செய்ய அனுப்பும் ஆட்களை கொண்டு 15 நாள் ஜெயிலுக்கு போகிறார் தனுஷ்.

பிரச்சனை இப்படியிருக்க பிரகாஷ்ராஜிக்கு மந்திரி பதவிக்கிடைக்கிறது. அந்த பதவியை வைத்து எப்படியாவது ராஜ்கிரணை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார். அவரது வீட்டிற்கே சென்று சபதமும் செய்கிறார். இதைப்பார்த்த நாயகன் அமைச்சர் வீட்டுக்கு சென்று 30 நாளில் உன்னை கொள்வதாகவும் அப்படி செய்ய வில்லையென்றால் குடும்பத்துடன் உன் காலில் வந்து விழுவதாகவும் சபதம் செய்கிறார். இருவருக்குமான சந்திப்புகள் மற்றும் சண்டைகள் புதுபுது யுக்திகளை கையாண்டுள்ளார் இயக்குனர்.

கதையில் திருப்பமாக நாயகி தமன்னா தனுஷின் வீட்டிற்க்கு செல்கிறார். தன் தந்தை சாவுக்கு காரணமான ராஜ்கிரணை கொல்ல சதி செய்கிறார். வில்லன்களுக்கும் வேவு சொல்கிறார். இவ்வாறு நடக்கும் இரு தரப்பு சண்டையில் யார் ஜெயித்தது யார் யார் கொல்லப்பட்டார்கள் என ‌கிளைமாக்ஸ் காட்சிகள் ஓட்டம், துரத்தல், கத்தி, ரத்தம் என தனக்கே உண்டான பாணியில் பின்னியிருக்கிறார் ஹரி. 
 
வேங்கைப்படம் 100 சதவீதம் அருவா டாடா சுமோ என ஹரியின் படமாகவே வந்திருக்கிறது. நாயகன் தனுஷ் ஆரம்பக்காட்சியில் தன் ஊர் நண்பனின் வேட்டியை அவிழ்த்துவிட்டு செல்லும் பக்கத்து ஊர்காரர்களின் பேன்டை உருவும் காட்சி முதல் கடைசிக்காட்சியில் பிரகாஷ்ராஜியுடன் மோதும் காட்சிவரை தனுக்கே உண்டான பாணியில் நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அடிதடிச்சண்டைக்காட்சிகளில் நல்ல யாதார்த்தம் ‌தெரிகிறது. தன் தந்தை ராஜ்கிரணின் மகனாக தன் தந்தையை காக்க பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்கொண்டு கைதட்ட வைக்கிறார்.


கடைசிக்காட்சிகளில் தனுஷின் கையில் அருவாளை எடுத்துக்கொடுத்து கோவத்தில் அருவா எடுக்க கூடாது காவலுக்கு அருவா எடுக்கலாம் என்ற லாஜிக்கில் வில்லன்களை பழித்தீர்க்க அனுப்படும் காட்சிகளில் தியாட்டர் அதிர்கிறது.

அதிக அதட்டலுடன் ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜியும் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளனர். ராஜ்கிரணின் கம்பீரம், பிரகாஷ்ராஜின் படப்படப்பு படம் முழுக்க சபாஷ் வாங்குகிறது.

தனுஷை தெரியாது போல நடிக்கும் தமன்னா முதல் எனக்கு இங்கே இப்பவே தாலிக்கட்டு என சொல்லும் தமன்னாவரை அதிக காட்சிகள் இல்லையென்றாலும் தோன்றும் காட்சிகள் வரை அழகாக பண்ணியிருக்கிறார். ராஜ்கிரணை கொல்ல, செய்யும் சதியில் உடந்தையாக இருந்து பின்பு உண்மைநிலையறிந்து மனம்திருந்தி தனுசுடன் வந்துவிடும் தமன்னாவுக்கு இந்தப்படல் நல்ல பேரை எடுத்துக் கொடுக்கும். பாடல் காட்சிகளில் அழகாக தோன்றியிருக்கிறார்.

நகைச்சுவைக்கு கஞ்சா கருப்பு கூட்டாகவும் தனியாகவும் சிரிப்பலை‌யை ஏற்படுத்துகிறார். சைக்கிளுக்கு ஹான்டில்பார் பென்டு எடுக்கும் காட்சிகள் கைதட்ட வைக்கிறது.

படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், பறவை முனியம்மா ஜஸ்வர்யா என நிறைய நடிகர்பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது.

திரையரங்கில் பார்க்கும் போது அத்ததைப்பாடல்கலும் சூப்பர். ஆனால் பாடத்தில் வேத்தோடு பார்க்கும்போது பாடல்கள் வே‌கத்தை குறைப்பது போன்று தெரிகிறது.
பல்வேறு திருப்பங்களுடனும், நகைச்சுவையுடன் கலந்து அடிதடிக்கு இனி என்னைவிட்டால் யாரும் இல்லையென நிருபித்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்க்கு ஏற்றார் போல் ஏற்ற இறக்கங்களுடன் சரியாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் அருமை.
படம் தியாட்டரில் போதுமான வசூலை அள்ளும் என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment