Thursday, June 23, 2011

ஈ-மெயில் படித்து சொல்லும் புதிய கார்: எங்கே போகிறது தொழில்நுட்பம்?


நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கட்டங்கள் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித்தந்து கொண்டிருக்கிறது இன்றைய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும். அந்த வரிசையில் நாம் எதிர்பார்க்காத புதிய ஒரு விடயம்தான் நடந்தேறியுள்ளது. அதாவது எமக்கு வருகின்ற மின்னஞ்சல் மற்றும் Facebook and Twitter updates களை உடனுக்குடன் படித்து வாய்ஸ் மூலம் வாகன சாரதிக்கு சொல்லிவிடுகின்றது ஒரு கார். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?? ஆம் இது எவ்வாறு சாத்தியப்படுகின்றது என்றால் குறித்த காரில் பயணிக்க முன்னர் அதில் தயார் செய்யப்பட்டுள்ள சார்ஜரில் தனது smart phones அல்லது iPads ஐ தொடுத்து விடவேண்டும்.

பின்னர் நாம் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போது எமது பேஸ்புக் அல்லது டிவிட்டரில் புதிதாக தகவல்கள் பரிமாறப்பட்டால் எமக்கு அந்த கார் வாய்ஸ் மூலம் பரிமாற்றப்பட்ட தகவலை படித்து சொல்கின்றது. அதைப்போலவே எமக்கு மின்னஞ்சல் வருகின்ற போதும் அவற்றை அப்படியே படித்து சொல்லிவிடுகின்றது. இக்கார் “இணையத்தளக்கார்” என அழைக்கப்படுகிறது. அண்மையில் ஜெனீபாவில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த இலத்திரனியல் இணையக்கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏராளமானவர்கள் இத்தொழில்நுட்பத்தை பாராட்டிச் சென்றுள்ளனர். இது மாத்திரமின்றி இக்காருக்குள் Wi-Fi transmitter தொழில்நுட்பமும் காணப்படுகின்றமையால் லாப்டெப்பையும் இலகுவாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment