Tuesday, May 3, 2011

ஒசாமா Vs ஒபாமா


     ஓசாமாவின் முழு பெயர் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின், என்ன பின் பின் என இருக்குனு பாக்குறிங்களா! அதுவும் அவரின் பெயர் தான் மச்சி. ஓசாமா பிறந்தது 1957ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சவுதிஅரேபியாவில். இவரது தந்தைக்கு மொத்தம் 52 பிள்ளைகள், அம்மாடியோ விடுங்க உங்க பிலிங் புரியுது. நமக்கு இரண்டு போதும்ங்க. 52 பிள்ளைகளில் ஓசாமா பின்லேடன் 17வது. 
     பின்லேடனின் கல்வி தகுதி பற்றி தெரியுமா! ஓசாமா பல்கலைக்கழகத்தில் எகனாமிக்ஸ் மற்றும் பிசினஸ் அட்மினிஸ்டிரேசன் படித்துள்ளார். பின்லேடனுக்கு திருமணம் ஆகும் போது அவரது வயது 17. அவரது மனைவியுன் பெயர் நஜ்வா கானம். எனக்கு தெரிந்த வரைக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேடனுக்கு மொத்தம் 4மனைவிகள், 26 குழந்தைகள்.

     1988ல் முதலாக அல்கொய்தா என்னும் அமைப்பை தொடங்கினார். சவுதிஅரேபிய அரசு இவர், சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த இயக்கத்திற்கு தடை விதித்தது. சவுதி அரேபிய அரசு இவருக்கான குடியுரிமையை ரத்து செய்தது. பின்னர் சிறிது காலங்கள் சூடான் நாட்டில் தங்கியிருந்தார். அமெரிக்கா, நைரோபி, கென்யா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்கா தூதுவரங்கள் மீது அல்கொய்தா அமைப்பு குண்டுவெடிப்பு நடத்தியது. அமெரிக்காவின் நெருக்கடி காரணாமாக சூடான் அரசு லேடனை நாடு கடத்துவதாக 1996யில் அறிவித்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் குடியேரினார். புனித போர் என அமெரிக்காவுக்கு எதிராக போர் அறிவித்தார். 
     அமெரிக்கா அரசு பாகிஸ்தானிக்கு சாதகமாகவும் இஸ்ரேலுக்கு எதிராக இருக்க வேண்டுமெனவும் அறிவித்தது அல்கொய்தா அமைப்பு. மேலும் அமெரிகர்கள் கொல்ல தக்கவர்கள் எனவும் அறிவித்தது. இதுவே அமெரிக்கவுக்கு எதிராக மாறியது. மேலும் இதனை அதிகரிக்கும் பொருட்டு, ஓசாம 2001ல் அமெரிக்க தூதுரங்கள் மீது மிக பயங்கர குண்டு வெடிப்பை ஓசாமா தலைமையிலான் அல்கொய்தா அமைப்பு ஏற்ப்படுத்தியது. இரட்டை கோபுரம் தகர்பு தான் மிக கொடுரமான செயலாக கருதப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்கா அரசு கடந்த 10ஆண்டுகளாக ஓசாமாவை தேடி, தற்போது சுட்டுகொன்று உள்ளது. இதனை அமெரிக்கா மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

ஓசாமாவின் உடல் கடலில் வீச பட்டதாக செய்தி தற்போது பரவியுள்ளது.

No comments:

Post a Comment