Wednesday, May 18, 2011

உங்க பாட்டன் வீட்டு சொத்தா?


 100 மில்லியன் டொலர் சொத்துக்கள் 92 வருடங்களின் பின்னர் பகிரப்பட்டுள்ளன. வெலிங்டன் பெர்ட் என்பவர் 1919ஆம் ஆண்டு அவருடைய 87வது வயதில் மிக்கிங்கனிலுள்ள சகினாவில் இறந்த போது உயில் ஒன்றை எழுதி வைத்தார்.

-அதில், பெரும்பாலான சொத்துக்கள் அவருடைய கடைசி பேரன் இறந்து 21 வருடங்கள் வரை எவருக்கும் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது என எழுதியிருந்தார்.

வெலிங்டன் பெர்ட் இறந்தபோது அமெரிக்காவின் 10 பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஆனால், இவர் ஏன் இவ்வாறானதொரு உயிலை எழுதினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இவருடைய விருப்பமான மகன் ஒருவருக்கு மாத்திரமே ஒவ்வொரு ஆண்டும் 30,000 டொலர்கள் கிடைக்கும்படிச் செய்திருந்தார். அதேவேளை இவருடைய சொந்தப் பிள்ளைகளுக்கு ஆண்டொன்றிற்கு 1000 முதல் 5000 டொலர்கள் வரையே கிடைக்கிறது.

இவருடைய கடைசிப் பேரன் மரியான் லென்சில் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அதன் பின்னர் கடந்த ஆண்டுதான் உயிலின் படி 21 வருடங்கள் கடந்தது. மொத்தமாக 19 முதல் 94 வயது வரையான இவருடைய 12 வாரிசுகள் இம்மாத இறுதியில் 16 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள். இவருடைய குடும்ப உறவுமுறைகளுக்கமைய சொத்துப் பகிர்வு வித்தியாசப்படுகிறது.

பெர்ட்டினின் மூன்றாம் தலைமுறைப் பேத்தியான 19 வயதுடைய கெமிலனுக்கு 2.9 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ள நிலையில், பெர்ட் தனது குடும்பத்தவரை நேசிக்கவில்லை என்பது தெளிவாகத் தனக்குத் தெரிவதாக கெமில்லன் தெரிவித்துள்ளார்.

மிகத் தாமதமாகவே இந்த சொத்துக்கள் பகிரப்பட்டுள்ள நிலையில் பெர்ட்டின் 6 பிள்ளைகள், 7 பேரப்பிள்ளைகள், 6 பேரப் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் மற்றும் 11 பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த சொத்துக்கள் கிடைக்கவில்லை. அவர்கள் தற்போது உயிரோடும் இல்லை.

இந்த சொத்துப் பகிர்வில் கடமையாற்றிய நீதிபதி மெக்கிராவ் தன்னுடைய 12 வருட அனுபவத்தில் இவ்வாறானதொரு கடினமான சொத்து வழக்கை தான் கையாண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment