Monday, May 16, 2011

கடந்த கால, நிகழ்கால, வருங்கால கணினி வரலாறு

1958 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் இன் தொழிலாளி கில்பி உலகின் முதல் இன்டகிரேடட் சர்க்யூட்டினை (IC) கண்டுபிடித்தார். இதில் இரண்டு டடிரான்சிஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எல்லா நவீன கணணிகளும் இதன் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டன.
1965 – இன்டெலினை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான மூர் கணணியின் ப்ரொசசிங் பவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்படையலாம் என முன்னறிவித்தார். அவர் குறிப்பிட்டது மிகத் துல்லியமாக உள்ளது.
1980 – IBM 3380 ஹார்ட் ட்ரைவ் வெளிவந்தது. இது ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவில் இருந்ததோடு 2GB சேமிப்பு செய்யக்கூடிய வகையிலும் இருந்தது.

1981 – IBM கணணி வெளிவந்தது. கணணியின் அளவு சிறிதாக்கப்பட்டது. முதல் லெப்டாப் (மடிக்கணணி) அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய விலையில் 4500 டொலராக இருந்த இந்த மடிக்கணணியின் அளவு 24.5 பவுண்ட்ஸ்.

1982 – 31ஃ2 அங்குல பிளாப்பி டிஸ்க் வெளிவந்து 8 மற்றும் 51ஃ2 அங்குல பிளாப்பி டிஸ்க்கினை வெளியேற்றியது. இது 400KB கொள்ளளவு கொண்டிருந்ததோடு வெளிவந்த இரண்டே ஆண்டுகளில் அப்பிள், அட்டரி மற்றும் கொமோடோர் ஆகியன இதனை சுவீகரித்துக்கொண்டன.

1984 – மெசின்டோஷ் 128k வெளிவந்தது. இதற்கு 125kb RAM சப்போர்ட் செய்யக்கூடியதாக இருந்தது.

1993 – இன்டெல்லின் முதல் பென்டியம் பிரான்ட் சிப் வெளிவந்தது. 6 வருடங்களின் பின்னர் 1999ஆம் ஆண்டு பென்டியம் III வெளிவந்தது.

2007 – ட்ரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தில் சிலிக்கனுக்குப் பதிலாக மெட்டல் பாவனை செய்யப்பட்டு கம்பேக்ட்னஸ் அதிகரிக்கப்பட்டது.

2010 – காவியர் கிரீன் ஹார்ட் ட்ரைவ் 2TB யினைப் பெற்றிருந்ததோடு இதனுடைய அளவு கையடக்கமானதாக இருந்தது. விலை 80 டொலர்களாக இருந்தது.

2023 – மைக்ரோபிக்ஸ் 2023ஆம் ஆண்டில் அதன் அளவு எல்லையினை எட்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சர்க்யூட்கள் மிக சிறிதாகும் எனவும் நம்பப்படுகிறது. கணணிகள் வேகமடைந்தால் சிலிக்கான் சிப்பிற்குப் பதிலாக வேறொன்றைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்.

20XX- எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த தெரிவாக குவான்டம் கம்ப்யூட்டிங் இருக்கும். இதில் 1000 மடங்கு அதிகமான ப்ரொசசிங் பவர் இருக்கும்.

20XX- – மின்சாரத்திற்குப் பதிலாக வெளிச்சத்தைப் பாவித்து பயன்படுத்தக்கூடிய Fiber-optics கண்டுபிடிக்கப்படலாம்.

20XX- அடுத்ததொரு சாத்தியக்கூறு DNA வைப் பாவித்து பயன்படுத்தக்கூடிய கணணி. DNA மிக விலை குறைந்தது. உயிரியல் கணணிகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் நோய்களை இலகுவாக குணப்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. இதற்கான அடித்தளத்தை விஞ்ஞானிகள் இப்போதே கொண்டுள்ளனர்.

கனணிகள் வெளியீட்டுப் பகுதி விரைவடைந்து வருகிறது. புதிய புதிய வழிகளில் தொடர்ந்து வேகத்தைக் கூட்டுவதற்கான, அளவைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் 2013ஆம் ஆண்டு இறுதியில் நாம் இறுதிக்கட்ட processor வேகத்தினை அடைந்துவிடுவோம் போல் தெரிகிறது.

சிலர் இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் நாமும் அப்படி இருக்க வேண்டுமா? உண்மை என்னவென்றால் எல்லாமே ஒரு காரணத்திற்காகத் தான் இருக்கிறது. மைக்ரோபிக்ஸ் மிகச்சிறியதாகி வருவதும் கூட எலக்ட்ரான்சைத் தொடர்ந்து processor வேகத்தை நிர்ணயிக்கத்தான்.

அப்படியானால் நாம் இந்த எல்லையை அடைந்த பின்னர் என்ன நடக்கும்? ஏதாவது புதிய வகை தொழில்நுட்பம் இந்த prosessor இன் வேகங்களை மேலதிகமாக அதிகரிக்கச் செய்யுமா? இந்தக் கேள்வி உண்மையில் விடையளிக்க கடினமானதொன்றுதான்.

ஆனால் சிலர் இன்னும் 12 வருடங்களில் புதிய தொழில்நுட்பம் கிடைக்கக் கூடியதாய் இருக்கும் எனவும் அவை முன்னேற்றத்திற்கு வழிகோலும் எனவும் தெரிவிக்கின்றனர். சிலர் இந்த வரலாற்று நேரக்கோடு தொடர்பில் மிக ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இதுபற்றிய தகவல் வரைகலையினை சேகரித்து வருவதோடு ஒன்லைன் கனணி அறிவியல் பட்டம் குறித்த அறிவினையும் பெற்றுள்ளனர்.

நமக்குத் தெரிந்த கணணியின் முடிவு இது தானா?

No comments:

Post a Comment