Wednesday, May 11, 2011

ப்ரௌசருக்குள் எத்தனை ப்ரௌசரடி!!!


ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள். உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.
கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம்https://addons.mozilla.org/enUS/firefox/ addon/8740?src=oftenusedwith என்ற முகவரியிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானதுhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/1429?src= oftenusedwith என்ற முகவரியிலும், சபாரிக்கான புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/6438?src=oftenusedwith என்ற முகவரியிலும், ஆப்பராவிற்கான புரோகிராம்https://addons.mozilla. org/enUS/firefox/addon/1 190?src=oftenusedwith என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.
Read more »

No comments:

Post a Comment