Sunday, May 15, 2011

வருங்காலம் வெல்க - ஜெயலலிதா

     இந்த முறை திமுகவை தமிழக மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்குவார்கள் தான் ஆனால் மாய்ந்து போய் விட மாட்டார்கள் என்பதை திமுக இப்போது தெள்ளத் தெரிந்து கொண்டிருக்கும்.
 
ஆட்சி கட்டிலை, வைர கிரீடத்தை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அவர் என்ன செய்ய வேண்டும் மக்கள் நினைக்கிறார்கள்.

1. தமிழ் அறிஞர் குழு ஒன்றை நியமித்து தமிழ் புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் என்று சங்க இலக்கியங்கள் முதலானவற்றை ஆய்ந்து பின்னர் புத்தாண்டை மாற்றுவது குறித்து முடிவெடுங்கள்.
2. நம் சகோதர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக குறைந்தபட்ச தண்டனையாவது வாங்கி கொடுங்கள்.

3. எதிர் கட்சியே கிடையாது என்ற எண்ணத்தில் இஷ்டத்திற்கு முடிவு எடுத்து விடாதீர்கள்.

4. தமிழகம் முழுதும் நிறைந்திருக்கும் ரவுடிகள் (பெயருக்கு தான் ஆனால் எல்லாம் வெது வேட்டு) கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும். (முதல் சூளுரையே அது தானே - சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவேன் -நேற்று ஜெயலலிதா)

5. ஊழல் கரை படாத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கருவிலுள்ள குழந்தையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.அந்தளவு நாட்டில் ஊழல் மலிந்துள்ளது, பழைய நினைவுகளை அழித்து புது ஜெயலலிதாவாக மாறுங்கள்.

6. மம்தாவைப் போல மிக எளிமையாக எல்லாம் வேண்டாம்; கொஞ்சம் ஆடம்பரமாய் இருங்கள் போதும்.

7. பத்திரிகை,தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தில் என்ன தான் நடக்கிறது என்று அடிக்கடி தெரியப் படுத்தினால் அதிக தவறுகள் நிச்சயமாய் குறையும்.

8. இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்று விட்டீர்கள் என என்னிட வேண்டாம். அவர்களும் கொடுத்தார்கள். மேலும் அறிவிக்கவும் செய்தார்கள். எனவே அந்த சோம்பேறி ஆக்கும் செயலை விடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதினும், மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் என்றும் பிறரிடத்து கை ஏந்தி நிற்க வேண்டி வராது அன்றோ?


9. அவர்கள் அதிமுகவிற்கு செய்ததை இவர்கள் திமுகவிற்கு செய்ய முற்படாமால், அவர்கள் மக்களுக்கு செய்யாததை இவர்கள் செய்ய வேண்டும்.

10. திரைத் துறையை சிலரின் இரும்பு பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.


11. கடைசியாக, அவர்கள் செய்தது எல்லாமே தவறு என்று முடிவு கட்டி விடாதீர்கள். சில திட்டங்களை மக்களை கவரும் நோக்கிலாவது அவர்கள் தொடங்கினார்கள். அதை நீங்களும் தொடர்வதால் நலமின்றி வேறில்லை.

12. நாட்டில் இவ்வளவு டாஸ்மாக் தேவையா? பள்ளி,கோயில் என்று போது இடங்களுக்கு அருகில் இருக்கும் மது பானக் கடைகளை உடனடியாக மூடி விடுங்கள்.

13. கேபிள் டிவியை முடிந்தளவு சீக்கிரமே அரசுடைமை ஆக்குங்கள்.

இந்த பட்டியல் இதனுடன் நில்லாது சாலை அமைத்தல், கல்வி நிலைய சீர்திருத்தங்கள் என மிகப் பெரிதாய் நீளும் மக்களுக்கு நன்மை எனப் படுபவை யாவற்றையும் நிறைவேற்றுங்கள்.

மீண்டும் தேர்தல் ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வரும் என்ற திமுக கொள்கையை கடைபிடித்தால் அவர்களுக்கு கிடைத்த அதே விடை உங்களுக்கும் கிடைக்காது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.

பதிவு பிடித்திருந்தால் , ஓட்டு போடுங்கள்.
அப்படியே தமிழ்மணம் பயன்படுத்துவோர், அதன் பட்டை ஏன் குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே வேளை செய்கிறது என்ற ரகசியத்தையும் சொல்லுங்கள்...
Any உள்குத்து??

4 comments:

  1. வணக்கம் தோழரே ..

    தமிழக முதல்வருக்கு தமிழக மக்களின் எண்ணங்களை அருமையாக
    தொகுத்திருக்கிறீர்கள்.. நன்றி..

    இன்றுதான் முதல் முறையாக தங்களது தளத்தை பார்வையிடுகிறேன்..

    பின்புலத்தை ( BACKGROUND ) படிக்க மிகமிக கஷ்டமாக இருக்கிறது...

    தங்களுடைய பழைய பதிவுகளை பார்வையிடலாம் என்றால் தலைப்பே தெரியவில்லை கலர் மற்றும் பின்புலம்
    சரியில்லாததால் படிப்பவர்களை அது வாட்டும்..

    எனவே உடனடியாக இதை
    சரிசெய்யுங்கள் நன்றி..

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. சிரமத்திற்கு மன்னிக்கவும். முடிந்தவரை உடனே மாற்ற முயல்கிறேன்

    ReplyDelete
  3. வணக்கம் தோழரே ..

    உடனடியாக கவனிக்கிறேன் என்றமைக்கு மிக்க நன்றி..

    இன்னொரு வேண்டுகோள் தங்களது தளம் ஓபன் ஆக வெகுநேரம் எடுத்துக் கொள்கிறது அதையும் சரி செய்ய வேண்டுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  4. தோழரே எம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு உடனடியாக சரி செய்தமைக்கு மிக்க நன்றி .. ஆனால் பேக்கிரவுண்டில் எந்த படமும் இல்லாமல் வெறுமென இருந்தால் படிப்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும்.


    வேகமும் கூடியதைப் போல தோன்றுகிறது.. இன்னும் அப்டேட் செய்யுங்கள்...


    எமது கருத்துக்களில் பிழை இருப்பின் பொறுத்தருள்க..

    ReplyDelete